தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-2805

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அவர்கள் தொழுகையை நிறைவேற்றியதும் தம்முடைய முகத்தை ஸஹாபாக்களை முன்னோக்கி “இமாம் ஓதிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் இமாமிற்குப் பின்னால் உங்கள் தொழுகையில் ஓதுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் வாய்மூடி மவுனமாக இருந்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை கேட்டதும் நபித்தோழர்களில் ஒருவர் ”நாங்கள் அவ்வாறு செய்கிறோம்“ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள். (என்றாலும்) “அல்ஹம்து சூராவை“ தன்னுடைய மனதிற்குள் ஓதிக் கொள்ளுங்கள்“ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(abi-yala-2805: 2805)

حَدَّثَنِي مَخْلَدُ بْنُ أَبِي زُمَيْلٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الرَّقِّيُّ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ أَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ فَقَالَ: «أَتَقْرَءُونَ فِي صَلَاتِكُمْ خَلْفَ الْإِمَامِ وَالْإِمَامُ يَقْرَأُ؟» فَسَكَتُوا، فَقَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ قَائِلٌ – أَوْ قَالَ قَائِلُونَ – إِنَّا لَنَفْعَلُ، قَالَ: «فَلَا تَفْعَلُوا لِيَقْرَأْ أَحَدُكُمْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي نَفْسِهِ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-2805.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-2778.




  • இந்த செய்தி பற்றி, இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    அவர்கள் தனது தந்தை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்களிடம் கேட்டபோது இதில் உபைதுல்லாஹ் பின் அம்ர் தவறு செய்துவிட்டார். காலித் பின் மிஹ்ரான் அல்ஹத்தா அவர்கள், (அபூகிலாபா —> முஹம்மது பின் அபூஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    —> ஒரு நபித்தோழர் —> நபி-ஸல்) என்று அறிவிக்கும் செய்தியே உண்மை என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறினார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-502 (2/444, 445)

அபூகிலாபா அவர்கள், அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இந்த செய்தியைக் கேட்கவில்லை. இடையில் முஹம்மது பின் அபூஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
என்ற அறிவிப்பாளர் விடப்பட்டுள்ளார் என்பதைத் தான் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • மேலும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இந்த அறிவிப்பாளர்தொடரில் அனஸ் (ரலி) அவர்களை கூறப்பட்டிருப்பது சரியானதல்ல என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் கபீர்-1/207)

  • இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களை விரிவாக கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இது முர்ஸல் என்றே முடிவு செய்துள்ளார். அதன் விவரம்…

1 . அய்யூப் வழியாக அறிவிப்பவர்கள்:

உபைதுல்லாஹ் பின் அம்ர்

ஸல்லாம்

ரபீஉ பின் பத்ர்

..இப்னு உலைய்யா, இப்னு உயைனா, ஹம்மாத் பின் ஸைத்..

2 . காலித் அல்ஹத்தா வழியாக அறிவிப்பவர்கள்:

…ஸுஃப்யான், யஸீத், பிஷ்ர்

…இப்னு உலைய்யா, காலித் பின் அப்துல்லாஹ், ஷுஃபா, அலீ பின் ஆஸிம்,

…ஹுஷைம்…

…இந்த செய்தியை மிக பலமான அறிவிப்பாளர்களான இப்னு உலைய்யா, இப்னு உயைனா, ஹம்மாத் பின் ஸைத் போன்றோர் அய்யூப் அவர்களிடமிருந்து அபூகிலாபா —> நபி (ஸல்) அவர்கள் என்ற அறிவிப்பாளர் தொடரில் தான் (நபித்தோழர் விடப்பட்டு) முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

இவ்வாறே காலித் அல்ஹத்தா வழியாக அறிவிக்கும் இப்னு உலைய்யா, காலித் பின் அப்துல்லாஹ், ஷுஃபா, ஹுஷைம் போன்றோரும் அபூகிலாபா —> நபி (ஸல்) அவர்கள் என்ற அறிவிப்பாளர் தொடரில் தான் (நபித்தோழர் விடப்பட்டு) முர்ஸலாக அறிவித்துள்ளனர். (இதன்படி இந்த செய்தியை முர்ஸல் என்றே கூறவேண்டும்)

(நூல்: அல்இலலுல் வாரிதா-2664 , 12/237)

4 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உபைதுல்லாஹ் பின் அம்ர் —> அய்யூப் —> அபூகிலாபா —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-2805 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-18441852 , அல்முஃஜமுல் அவ்ஸத்-2680 , தாரகுத்னீ-1288 , 1289 , குப்ரா பைஹகீ-2923 ,

  • அய்யூப் —> அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: தாரகுத்னீ-1287 ,

  • காலித் —> அபூகிலாபா —> முஹம்மது பின் அபூஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    —> ஒரு நபித்தோழர்

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-2791 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3757 , அஹ்மத்-1807020600 , 2076523481 , குப்ரா பைஹகீ-2922 ,

….

மேலும் பார்க்க: புகாரி-772 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-311 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.