19245. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.
அறிவிப்பவர்கள்: அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி)
….
وَرَوَاهُ مُعَاوِيَةُ بْنُ يَحْيَى الصَّدَفِيُّ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، مَرَّةً عَنْ أَبِي سَعِيدٍ وَمَرَّةً عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ
أَخْبَرَنَاهُ أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ , أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ , أنبأ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ , ثنا دُحَيْمٌ , ثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ , ثنا مُعَاوِيَةُ بْنُ يَحْيَى , فَذَكَرَهُ وَقَالَ: عَنْ أَبِي سَعِيدٍ.
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-19245.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-17709.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44871-முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்ற அறிஞர்கள் இவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுல் கமால் 28 / 221 ).
- இவரைப் பற்றி, அழிபவர், எந்த மதிப்பும் இல்லாதவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள்.
- இவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர் என்று அல்ஜோஸ்ஜானீ அவர்களும்,
- நம்பகமானவர் இல்லை என்று அபூஸுர்ஆ அவர்களும் கூறியுள்ளார்கள்.
- இவர் பலவீனமானவர், இவருடைய ஹதீஸில் மறுக்கப்பட வேண்டியவை உள்ளன என்று அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார்கள். - இவரை (பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால்) நாங்கள் விட்டுவிட்டோம் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம் :10, பக்கம் : 197
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-19245 , 19246 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-16751 .
சமீப விமர்சனங்கள்