அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறுதியாக இருங்கள். வெற்றியடைவீர்கள். உங்களுடைய நற்காரியங்களில் சிறந்தது தொழுகையாகும். நம்பிக்கைக் கொண்டவனைத் தவிர வேறு எவரும் உளூவைப் பேண மாட்டார்கள்…
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
(இப்னுமாஜா: 277)حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اسْتَقِيمُوا، وَلَنْ تُحْصُوا، وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةَ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-277.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-273.
- இந்த செய்தி ஸவ்பான் (ரலி) வழியாகவும், வேறு சில நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
1 . அஃமஷ் —> ஸாலிம் பின் அபுல் ஜஃத் —> ஸவ்பான் (ரலி)
பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-1089 , அஹ்மத்-22378 , 22436 , தாரிமீ-681 , ஹாகிம்-447 , 448 ,
2 . மன்ஸூர் —> ஸாலிம் பின் அபுல் ஜஃத் —> ஸவ்பான் (ரலி)
பார்க்க : தாரிமீ-681 , இப்னு மாஜா-277 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7019 , ஹாகிம்- 449 ,
3 . யஸீத் பின் அபூஸியாத் —> ஸாலிம் பின் அபுல் ஜஃத் —> ஸவ்பான் (ரலி)
பார்க்க : முஸ்னத் ரூயானீ-619 ,
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16717-ஸாலிம் பின் அபுல் ஜஃத் பலமானவர் என்றாலும் ஸவ்பான் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாத்திம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்றோர் கூறியுள்ளனர். - மேலும் இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் ஸாலிமுக்கும், ஸவ்பான் (ரலி) அவர்களுக்கும் இடையில் மஃதான் பின் அபூதல்ஹா இடம்பெறவேண்டும். மேலும் இவைகள் சரியான செய்தி அல்ல என்று கூறியுள்ளார்…(நூல்: தஹ்தீபுல் கமால் 10/130) எனவே இவை முன்கதிஃ என்பதால் பலவீனமான அறிவிப்பாளர் தொடர்களாகும்.
என்றாலும், ஹஸ்ஸான் —> அபூகப்ஷா —> ஸவ்பான் (ரலி) வழியாக வருவது ஹஸன் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்தொடர் என்பதால் இந்த செய்தி சரியானது என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் கூறியுள்ளனர்.
4 . ஹஸ்ஸான் —> அபூகப்ஷா —> ஸவ்பான் (ரலி)
பார்க்க : அஹ்மத்-22433 , தாரிமீ- 682 , இப்னு ஹிப்பான்-1037 , …
5 . ஹரீஸ் பின் உஸ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் மைஸரா —> ஸவ்பான் (ரலி)
பார்க்க : அஹ்மத்-22414 , முஸ்னதுஷ் ஷாமிஈன்-1078 ,
………………………………………….
ஸவ்பான் (ரலி) மூலம் அறிவிக்கும் ஸாலிம் இப்னு அபில்ஜஃது என்பவர் ஸவ்பான் காலத்தவர் அல்ல என்பதால் இது அறிவிப்பாளர் வரிசை தொடர்பற்ற ஹதீஸாகும். அதனால் இது முன்க்திஉ செய்தி
இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அபு சயீத் என்பவர் இடம் பெறுகிறார்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இவரை பலவீனமானவர் என்று விமர்சனம் செய்கிறார்கள்
நூல்-தர்கீப் அல் தஹ்தீப்-211
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நான் இப்னுமாஜா ஹதீஸ் தொடர் பதிவாக பதிவிட்டு கொண்டிருக்கின்றேன் 493 வரை கிடைத்தது மேற்கொண்டு எனக்கு கிடைக்கவில்லை எனக்கு தொடர்ந்து ஹதீஸ் அனுப்ப முடியுமா
என்னை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
[email protected]
965 98832767
ஹதீஸ்கள் தமிழில் வேண்டுமா அல்லது தரம் ஆராய வேண்டுமா? சகோதரு
தொடர்ச்சியாக தமிழில் வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த செய்தி மேலும் பல வழிகளில் வந்துள்ளது. அதைப்பற்றி இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்கிறோம். அனைத்தையும் இணைத்து சரியான செய்தி என சிலர் கூறுகின்றனர். எனவே அதில் கூடுதல் தகவல் சேர்க்கவேண்டியுள்ளது.