அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது (ஸுன்னத்) நபிவழியாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமாகும்.
யார் விளம்பரத்திற்காக செய்கிறாரோ (அவர் உள்நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த செய்தியை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து ஸியாத் பின் அப்துல்லாஹ் என்பவர் மட்டுமே நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். இவர் அதிகமாக அரிதான செய்திகளையும், முன்கரான செய்திகளையும் அறிவிப்பவர் ஆவார்.
வகீஃ பின் அல்ஜர்ராஹ் அவர்கள், ஸியாத் பின் அப்துல்லாஹ் சிறப்பிற்குரிய மனிதர் என்றாலும் ஹதீஸில் பொய் சொல்பவர் என்று கூறியதாக முஹம்மது பின் உக்பா அவர்கள் தெரிவித்ததாக முஹம்மது பின் இஸ்மாயீல் (புகாரீ இமாம்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
(திர்மிதி: 1097)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«طَعَامُ أَوَّلِ يَوْمٍ حَقٌّ، وَطَعَامُ يَوْمِ الثَّانِي سُنَّةٌ، وَطَعَامُ يَوْمِ الثَّالِثِ سُمْعَةٌ، وَمَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ»
«حَدِيثُ ابْنِ مَسْعُودٍ لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ حَدِيثِ زِيَادِ بْنِ عَبْدِ اللَّهِ، وَزِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ كَثِيرُ الغَرَائِبِ وَالمَنَاكِيرِ». وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَذْكُرُ، عَنْ مُحَمَّدِ بْنِ عُقْبَةَ قَالَ: قَالَ وَكِيعٌ: «زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ مَعَ شَرَفِهِ يَكْذِبُ فِي الحَدِيثِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1097.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1012.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16332-ஸியாத் பின் அப்துல்லாஹ் பின் துஃபைல் அல்பக்காயீ அல்கூஃபீ பற்றி வகீஃ அவர்கள் இவர் ஹதீஸில் பொய் சொல்பவர் என்று கூறியதாக புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் தெரிவித்தார்கள் என திர்மிதீ இமாம் கூறியுள்ளார். ஆனால் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்கள் தனது தாரீகுல் கபீர் என்ற நூலில் வகீஃ அவர்கள், ஸியாத் பின் அப்துல்லாஹ் பற்றி பாராட்டியுள்ளதாகத் தான் கூறியுள்ளார்.
التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (3/ 360)
1218- زِياد بْن عَبد اللهِ بْن الطُّفَيل، البَكّائِي، الكُوفيّ.
سَمِع ابْن إِسْحَاق، ومُغيرة.
وقال ابْن عُقبة السَّدُوسيّ، عَنْ وكيع: هو أشرف من أن يكذب.
قَالَ دَلُّويه: مات سنة ثلاث وثمانين ومئة.
வகீஃ பின் அல்ஜர்ராஹ் அவர்கள், ஸியாத் பின் அப்துல்லாஹ் பொய் கூறுவதை விட்டும் சிறப்பிற்குரியவர் என்று கூறினார் என முஹம்மது பின் உக்பா அஸ்ஸதூஸீ கூறினார்.
(நூல்: தாரீகுல் கபீர்-1218, பாகம்: 3, பக்கம்: 360, புதிய பதிப்பு-4079)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களும், வகீஃ பின் அல்ஜர்ராஹ் அவர்கள், ஸியாத் பின் அப்துல்லாஹ்வை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறியதற்கு பலமான ஆதாரமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் தனது குனா என்ற நூலில் தாரீகுல் கபீரில் உள்ளது போன்றே குறிப்பிட்டுள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் லா யக்திபு-பொய் கூறமாட்டார் என்ற வார்த்தையில் உள்ள லா என்பது திர்மிதீ இமாமின் அறிவிப்பில் விடுபட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/649, தக்ரீபுத் தஹ்தீப்-1/346)
- அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் இதைப் பற்றி விரிவாக கூறியுள்ளார்…
(நூல்: இர்வாஉல் ஃகலீல்-7/10)
எனவே இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறுவது அவதூறு என சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
- இப்னு இத்ரீஸ், இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அபூஸுர்ஆ, தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
போன்றோர் இவர் ஸதூக்-நம்பகமானவர்-சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர். - இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம். ஆனால் தனி ஆதாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார். - இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
முஹம்மது பின் ஸாலிஹ், நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் அதிகம் தவறிழைப்பவர்; இவர் தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/649, …)
இவர் விசயத்தில் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களின் கருத்து பலவகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்களின் அறிவிப்பு.
இவர் இப்னு இஸ்ஹாகிடமிருந்து அறிவிப்பது தான் சரியானது. மற்றவர்கள் வழியாக அறிவிப்பது பலவீனமானது என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.கூறினார்.
2 . உஸ்மான் அத்தாரிமீ அவர்களின் அறிவிப்பு.
இவர் அறிவிக்கும் யுத்தம் சம்பந்தமான செய்திகள் பரவாயில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.கூறினார். நான், யுத்தம் சம்பந்தமான செய்திகளை யூனுஸ் பின் புகைரின் மாணவர்களிடமிருந்து எழுதிக் கொள்ளவா? அல்லது மற்றவர்களிடமிருந்து எழுதிக்கொள்ளவா? என்று கேட்டேன். அதற்கவர், ஸியாத் பின் அப்துல்லாஹ்வின் மாணவர்களிடமிருந்து எழுதிக்கொள்! என்று கூறினார்.
3 . முஹம்மது பின் உஸ்மான் பின் அபூஷைபா பிறப்பு ஹிஜ்ரி 156
இறப்பு ஹிஜ்ரி 239
வயது: 83
அவர்களின் அறிவிப்பு.
இவர் ஒரு பொருட்டே அல்ல. இவர் அறிவிக்கும் யுத்தம் சம்பந்தமான செய்திகள் பரவாயில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.கூறினார்.
4 . அப்பாஸ் பின் முஹம்மத் அத்தூரீ அவர்களின் அறிவிப்பு.
இவர் ஒரு பொருட்டே அல்ல. இவர் அறிவிக்கும் யுத்தம் சம்பந்தமான செய்திகள் என் பார்வையில் பரவாயில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.கூறினார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1/649, அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/537)
- இப்னு இத்ரீஸ் அவர்கள், இவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தார் என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியுள்ளார். - இப்னு இஸ்ஹாகிடமிருந்து அறிவிப்பவர்களில் இவரே மிக பலமானவர்; காரணம் இவருக்கு இரண்டு தடவை இப்னு இஸ்ஹாக் ஹதீஸை எழுதிக்கொடுத்தார் என்று இப்னு இத்ரீஸ் கூறியதாக யஹ்யா பின் ஆதம் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/649)
மேற்கண்ட தகவல் அடிப்படையில் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர்; யுத்தம் சம்பந்தமான செய்திகள் விசயத்தில் இவர் பலமானவர்; (இப்னு இஸ்ஹாகிடமிருந்து இவர் அறிவிப்பது பலமானது) மற்றவர்களிடமிருந்து இவர் அறிவிப்பதில் சிறிது பலவீனம் உள்ளது; வகீஃ பின் அல்ஜர்ராஹ் அவர்கள், ஸியாத் பின் அப்துல்லாஹ்வை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறியதற்கு பலமான ஆதாரமில்லை. இவரை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் ஒரு செய்தியிலும், (முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் மூன்று செய்திகளிலும்) துணை ஆதாரமாகக் கூறியுள்ளனர். (பார்க்க: புகாரி-2805 , முஸ்லிம்-882 , 1967 , 2458 ). இவர் ஹிஜ்ரீ-83 இல் மரணமடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/346)
- இந்த செய்தியை ஸியாத் பின் அப்துல்லாஹ் தனித்து அறிவிக்கிறார் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியதை குறிப்பிட்டு விட்டு, இவரை ஆதாரமாக ஏற்கலாமா? கூடாதா? என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது என்றும், இவர் அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து செவியேற்றது அதாஉ மூளை குழம்பிய பின்பே என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)கூறியுள்ளார்.
(நூல்: அத்தல்கீஸுல் ஹபீர்-1560)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1097 , அல்முஃஜமுல் கபீர்-10332 , குப்ரா பைஹகீ-14512 ,
2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11331 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-3745 , (புகாரி-5173 )
- இந்த செய்தியின் இரண்டாவது பகுதி சரியான அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. பார்க்க: புகாரி-6499 .
சமீப விமர்சனங்கள்