தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2465

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருடைய எண்ணம் மறுமையை நோக்கி இருக்கிறதோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ் போதுமென்ற நிலையை உருவாக்கிவிடுவான். அவருடைய காரியங்களை ஒன்றுகூடச் செய்வான். உலகம் சரணடைந்து அவருக்கு ஓடிவரும். யாருடைய எண்ணம், உலகத்தை நாடி இருக்கிறதோ அவருடைய கண்ணுக்கு முன் ஏழ்மையை கொண்டு வருவான். அவருடைய காரியங்களை சிதறடித்து விடுவான் உலகத்தில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அளவு (மட்டும்) வரும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(திர்மிதி: 2465)

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ الرَّبِيعِ بْنِ صَبِيحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ وَهُوَ الرَّقَاشِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ كَانَتِ الآخِرَةُ هَمَّهُ جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ وَجَمَعَ لَهُ شَمْلَهُ، وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ، وَمَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ جَعَلَ اللَّهُ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَفَرَّقَ عَلَيْهِ شَمْلَهُ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلَّا مَا قُدِّرَ لَهُ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2389.
Tirmidhi-Shamila-2465.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2402.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48783-யஸீத் பின் அபான் பலவீனமானவர், கைவிடப்பட்டவர் என சில அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் பற்றற்றவர் (நல்லமனிதர்) என்றாலும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/1071 )

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • இமாம் முன்திரீ அவர்கள், இந்த செய்தி வேறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்திருப்பதால் துணை சான்றாக எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் இந்தக் கருத்தில் வரும் மற்ற அறிவிப்பாளர்தொடர்களை வைத்து ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-949)

1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2465 , முஸ்னத் பஸ்ஸார்-6704 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5990 , 8882 ,

2 . ஸைத் பின் ஸாபித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-4105 .

3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11690 .

4 . அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5025 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.