தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-37247

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

ஒரு கூட்டம் தங்களது உணவுத் தட்டின் பக்கம் அழைப்பது போல், பிற சமுதாயங்கள், உங்களைக் கொன்றிட (ஒருவர் மற்றொருவரை) அழைத்துக் கொள்வார்கள். அப்போது உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழற்றப்பட்டு உங்களுடைய உள்ளங்களில் அவர்களைப் பற்றிய அச்சம் போடப்பட்டிருக்கும். மேலும் அப்போது உங்களுக்கு உலகமே விருப்பமாக ஆக்கப்பட்டிருக்கும் என்று ஸவ்பான் (ரலி) கூறினார்கள். (அவருடன் இருந்தவர்கள்), “அப்போது நாம்  எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா? என்று கேட்டனர். அதற்கவர்கள்,  இல்லை. உங்களில் அதிகமானோர் அன்றைய தினம் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் உபைத்

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 37247)

أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي الْأَشْهَبِ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ عُبَيْدٍ، عَنْ ثَوْبَانَ، قَالَ:

تُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا يَتَدَاعَى الْقَوْمُ عَلَى قَصْعَتِهِمْ , يُنْزَعُ الْوَهْنُ مِنْ قُلُوبِ عَدُوِّكُمْ، وَيُجْعَلُ فِي قُلُوبِكُمْ، وَتُحَبَّبُ إِلَيْكُمُ الدُّنْيَا , قَالُوا: مِنْ قِلَّةٍ؟ قَالَ: أَكْثَرُكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-37247.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-36546.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அம்ர் பின் உபைத் அல்அப்ஷமீ என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை. புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோர் இவர் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து மேற்கண்ட செய்தியை அறிவித்துள்ளார் என்ற தகவலை மட்டுமே கூறியுள்ளனர். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே இவரை நம்பகமானவரின் பட்டியலில் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் கபீர்-2610 , அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/247, அஸ்ஸிகாத்-5/179)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-22397 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.