தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-10736

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் ஒருவருக்கு யார் அவகாசம் அளிக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் அவனின் (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத (மறுமை) நாளில் தன் அர்ஷின் நிழலில் இடம்தருகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(shuabul-iman-10736: 10736)

أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بُشْرَانَ، أَنَا أَبُو جَعْفَرٍ، أَنَا أَبُو جَعْفَرٍ الرَّزَّازُ، ثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، أَنَا عَمْرُو بْنُ عَبْدِ الْغَفَّارِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ أَنْظَرَ مُعْسِرًا أَظَلَّهُ اللهُ فِي يَوْمٍ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-10736.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-10486.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32376-அம்ர் பின் அப்துல் அல்கஃப்பார் பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்றும், இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-5819)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-1306 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.