ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
10736. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் ஒருவருக்கு யார் அவகாசம் அளிக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் அவனின் (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத (மறுமை) நாளில் தன் அர்ஷின் நிழலில் இடம்தருகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بُشْرَانَ، أَنَا أَبُو جَعْفَرٍ، أَنَا أَبُو جَعْفَرٍ الرَّزَّازُ، ثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، أَنَا عَمْرُو بْنُ عَبْدِ الْغَفَّارِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ أَنْظَرَ مُعْسِرًا أَظَلَّهُ اللهُ فِي يَوْمٍ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-10736.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-10486.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32376-அம்ர் பின் அப்துல் அல்கஃப்பார் பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்றும், இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-5819)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-1306 .
சமீப விமர்சனங்கள்