56/2. நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அப்போது தொழுகையில் சேர்ந்த ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வ ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ கஸீரா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன், புகழுக்குரியவன் என்று அதிகமாக அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வானத்தின் பக்கம் பார்த்தார்கள். பின்பு தொழுகையை முடித்தபின் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதற்காக அர்ஷ் வரை உள்ள வானத்தின் வாசல்கள் அனைத்தும் திறக்கப்பட்டன” என்று கூறினார்கள்…
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 56)حَدَّثَنَا عُبَيْدُ بْنُ غَنَّامٍ، ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، ح وَحَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَا: ثنا حَبِيبُ بْنُ حَبِيبٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ، فَدَخَلَ دَاخِلٌ فِي الصَّلَاةِ، فَقَالَ: اللهُ أَكْبَرُ كَبِيرًا، وَسُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ كَثِيرًا، فَرَفَعَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى السَّمَاءِ، ثُمَّ أَقْبَلَ عَلَى صَلَاتِهِ حَتَّى إِذَا فَرَغَ مِنَ الصَّلَاةِ قَالَ: «مَنْ صَاحِبُ الْكَلِمَةِ؟» قَالَ: أَنَا يَا رَسُولَ اللهِ قَالَ: «لَقَدْ فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ فَمَا نَهْنَهَهَا شَيْءٌ دُونَ الْعَرْشِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-56/2.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-17555.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அப்துல்ஜப்பார் பின் வாயில் (ரஹ்) அவர்கள், தனது தந்தை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களிடம் ஹதீஸை கேட்கவில்லை என்பதால் இது முர்ஸல்-முன்கதிஃ என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
மேலும் பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1116 .
சமீப விமர்சனங்கள்