தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-1116

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அப்போது தொழுகையில் சேர்ந்த ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ புக்ரத்தவ் வ அஸீலா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன், புகழுக்குரியவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபின் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” அதனால் நன்மையைத் தான் நாடினேன் என்று கூறினார். அதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதற்காக அர்ஷ் வரை உள்ள வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டதை நான் பார்த்தேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

(tayalisi-1116: 1116)

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا سَلَّامٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ الطَّائِيِّ، عَنْ أَبِيهِ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي فَدَخَلَ رَجُلٌ، فَقَالَ: اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ بُكْرَةً وَأَصِيلًا فَلَمَّا صَلَّى قَالَ: «مَنِ الْقَائِلُ الْكَلِمَاتِ؟» قَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، وَمَا أَرَدْتُ بِهِنَّ إِلَّا خَيْرًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ رَأَيْتُ أَبْوَابَ السَّمَاءِ فُتِحَتْ فَمَا تَنَاهَى دُونَ الْعَرْشِ»


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-1116.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-1107.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21059-அப்துல்ஜப்பார் பின் வாயில் (ரஹ்) அவர்கள், பலமானவர் என்றாலும் இவர் பிறப்பதற்கு சில மாதங்கள் முன்பு இவரின் தந்தை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) இறந்துவிட்டார் என்பதால் இவர் தனது தந்தையிடமிருந்து அறிவிப்பது முர்ஸல்-முன்கதிஃ என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறியுள்ளார். இவ்வாறே இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    போன்றோரும் கூறியுள்ளனர். இவர் தன் தாயார்-உம்மு யஹ்யாவிடமிருந்து ஹதீஸை அறிவித்துள்ளார். என்றாலும் தனது தாயாரிடமிருந்தும் இவர் ஹதீஸை கேட்கவில்லை என கூறப்படுகிறது என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸிகாத்-7/135, தஹ்தீபுத் தஹ்தீப்-2/470, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/276…)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

3 . இந்தக் கருத்தில் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1116 , அல்முஃஜமுல் கபீர்-55 , 56 , 57 , 58 ,

மேலும் பார்க்க: முஸ்லிம்-1052 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.