தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1052

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.

Book : 5

(முஸ்லிம்: 1052)

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنِي الْحَجَّاجُ بْنُ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ

بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ قَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: اللهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَأَصِيلًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنَ الْقَائِلُ كَلِمَةَ كَذَا وَكَذَا؟» قَالَ رَجُلٌ مَنِ الْقَوْمِ: أَنَا، يَا رَسُولَ اللهِ قَالَ: «عَجِبْتُ لَهَا، فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ»

قَالَ ابْنُ عُمَرَ: «فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَلِكَ»


Muslim-Tamil-1052.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-601.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-948.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32758-அவ்ன் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள், இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) அவர்களை பார்க்கவில்லை என இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    கூறியுள்ளார். மேலும் இந்த செய்தியை முன்கதிஃ என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸிகாத்-15608)

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நபித்தோழர்களிடமிருந்து அறிவிப்பது முர்ஸல் (அதாவது முன்கதிஃ) என்ற ஒரு கருத்தும் கூறப்படுகிறது என்று கூறியுள்ளார். (ஆனால் யார் கூறினார் என்ற விவரங்களை கூறவில்லை.) புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) , அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) போன்றோரிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பது முர்ஸல் (அதாவது முன்கதிஃ) என்று கூறியுள்ளார். (இவருக்கு முன் வந்த திர்மிதீ அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்)

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/338, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-804)

  • என்றாலும், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) , இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) போன்றோரிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2138)

இந்த விமர்சனத்தில் குறை இல்லாவிட்டாலும் மற்றொரு விமர்சனம் உள்ளது.

  • இதில் வரும் ராவீ-42856-அபுஸ்ஸுபைர்-முஹம்மது பின் முஸ்லிம் தத்லீஸ் செய்பவர் என்று சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் அவ்ன் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லையென்றாலும், அஹ்மத்-5722 எண்ணில் நேரடியாக கேட்டதாக அறிவித்ததாக வந்துள்ளது. என்றாலும் இந்த அறிவிப்பாளர்தொடரில் ராவீ-25382-இப்னு லஹீஆ …இடம்பெற்றுள்ளார். மேலும் இப்னு லஹீஆவிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹஸன் பின் மூஸா இடம்பெற்றுள்ளார். இவர் இப்னு லஹீஆ மூளைகுழம்பியப்பின் செவியேற்றவர் என்பதால் இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமாகிறது என்பதால் அபுஸ்ஸுபைர்-முஹம்மது பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    அவர்கள், அவ்ன் அவர்களிடம் நேரடியாக கேட்டதாக ஆகாது.

என்றாலும் இந்த செய்தியை அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்றோர் சரியானது என்றே கூறியுள்ளனர்.

1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அவ்ன் பின் அப்துல்லாஹ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) 

பார்க்க: அஹ்மத்-4627 , 5722 , முஸ்லிம்-1052 , திர்மிதீ-3592 , குப்ரா நஸாயீ-961 , 962 , நஸாயீ-885 , 886 , முஸ்னத் அபீ யஃலா-5728  , குப்ரா பைஹகீ-2267 ,

  • யஹ்யா பின் அபூகஸீர் —> ஒரு மனிதர் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) ,
  • ஹைஸம் பின் ஹனஷ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-2559 , 2560 ,

2 . அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-19134 .

3 . வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1116 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-764 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.