(ஒரு சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹு அக்பர் கபீரா! அல்லாஹு அக்பர் கபீரா! அல்லாஹு அக்பர் கபீரா! வல்ஹம்துலில்லாஹி கஸீரா! வல்ஹம்துலில்லாஹி கஸீரா! வல்ஹம்துலில்லாஹி கஸீரா! வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா! (மூன்றுதடவை). அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானி மின் நஃப்கிஹீ, வ நஃப்ஸிஹீ, வ ஹம்ஸிஹீ…என்று கூறினார்கள்.
(துஆவின் பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன்! (மூன்றுதடவை). அதிகமதிகமான புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! (மூன்றுதடவை). காலையிலும் மாலையிலும் நான் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துகிறேன். (மூன்றுதடவை). ஷைத்தானை விட்டும் அவனுடைய துப்புதல், ஊதுதல், தீய தூண்டுதல் போன்றவற்றை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்.)
அறிவிப்பவர்: நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா அவர்கள் கூறினார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத அந்த தொழுகை எந்த தொழுகை என்று எனக்குத் தெரியாது. ஷைத்தானின் ஊதுதல் என்றால் கவிதை; அவனுடைய துப்புதல் என்றால் பெருமை; அவனுடைய தீய தூண்டுதல் என்றால் பைத்தியம் என்று பொருளாகும்.
(அபூதாவூத்: 764)حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَاصِمٍ الْعَنَزِيِّ، عَنِ ابْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ،
أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةً – قَالَ عَمْرٌو: لَا أَدْرِي أَيَّ صَلَاةٍ هِيَ – فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا ثَلَاثًا، أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ مِنْ نَفْخِهِ وَنَفْثِهِ وَهَمْزِهِ»،
قَالَ: نَفْثُهُ الشِّعْرُ، وَنَفْخُهُ الْكِبْرُ، وَهَمْزُهُ الْمُوتَةُ،
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-764.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-650.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20443-ஆஸிம் அல்அனஸீ (ஆஸிம் பின் உமைர்-ஆஸிம் பின் அபூஉமரா) என்பவரின் பெயர் என்ன என்பதில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. (காரணம் இந்தக் கருத்தில் வரும் அறிவிப்பாளர்தொடர்களில் இவரின் பெயர் பலவகைகளில் வந்துள்ளது). எனவே இவர் யாரென அறியப்படாதவர் என பஸ்ஸார் இமாம் கூறியுள்ளார். மேலும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இந்த ஹதீஸ் சரியானதல்ல என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/259, தாரீகுல் கபீர்-3070, தஹ்தீபுல் கமால்-3023)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- இந்தக் கருத்தில் வரும் அறிவிப்பாளர்தொடர்களைக் கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் அவர்கள், நாஃபிஉ பின் ஜுபைர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளரின் பெயர் ஆஸிம் அல்அனஸீ என்று இடம்பெறும் அறிவிப்பாளர்தொடர்களே உண்மை என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-3321)
1 . இந்தக் கருத்தில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-16739 , 16740 , 16760 , 16784 , இப்னு மாஜா-807 , அபூதாவூத்-764 , 765 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1052 .
சமீப விமர்சனங்கள்