தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-2560

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி ❌

2560. அல்ஹைஸம் பின் ஹனஷ் அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களைப் பார்த்தார். அவருக்கு அருகில் நின்று தொழுதார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா; வல்ஹம்து லில்லாஹி கஸீரா; வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா; அல்லாஹும்மஜ்அல்க அஹப்ப ஷைஇன் இலைக; வ அஹ்ஸன ஷைஇன் இன்தீ ”

(பொருள்; அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்; அல்லாஹ்வே! எல்லாவற்றையும் விட உன்னையே எனக்கு பிரியமானதாக ஆக்கு; என்னிடத்தில் அழகானதாக ஆக்கு) என்று கூறினார்.

அறிவிப்பவர்: (ரஹ்)

அபூஇஸ்ஹாக் (ரஹ்)

عمرو بن عبد الله بن عبيد

இறப்பு: ஹிஜ்ரி 129, கூஃபா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைது

தந்தை பெயர்: அப்துல்லாஹ்

வம்சம்: ஹம்தானீ

புனைப்பெயர்: அபூஇஸ்ஹாக்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: ஹமதான், கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரி 29

இறப்பு: ஹிஜ்ரி 129, கூஃபா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

இவர் கூஃபாவைச் சேர்ந்த ஒரு தாபிஈ அறிஞரும், ஹாஃபிழும் ஆவார். ஹிஜ்ரி 29ஆம் ஆண்டு உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் பிறந்தார். பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பதிலும், வணக்க வழிபாடுகளிலும் இவர் சிறந்து விளங்கினார். ஒவ்வொரு இரவும் ஆயிரம் வசனங்களை ஓதும் வழக்கம் இவருக்கு இருந்தது. ஹிஜ்ரி 129ஆம் ஆண்டு கூஃபாவில் காலமானார்.

முதுமையில் இவரது நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டாலும், இவர் மிகவும் நம்பகமான அறிவிப்பாளராகக் கருதப்பட்டார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அலீ பின் அபூதாலிப், அல்முகீரா பின் ஷுஃபா, சுலைமான் பின் ஸர்த், ஸைத் பின் அர்கம், அல்பரா பின் ஆஸிப், ஜாபிர் பின் ஸம்ரா, அதீ பின் ஹாதிம் அத்தய்யீ, அன்னுஃமான் பின் பஷீர், அபூஜுஹைஃபா, அல்அஸ்வத் பின் யஸீத், அப்துர்ரஹ்மான் பின் யஸீத் அன்னஃகஈ, ஸயீத் பின் ஜுபைர், ஆமிர் அஷ்ஷஅபீ, அல்கமா பின் கைஸ், மஸ்ரூக் பின் அல்அஜ்தஃ, மூஸா பின் தல்ஹா, முஆவியா, ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் அல்அஃவர்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): யுனுஸ் பின் அபூஇஸ்ஹாக், இஸ்ராயீல் பின் யுனுஸ் பின் அபூஇஸ்ஹாக், யூசுஃப் பின் இஸ்ஹாக் பின் அபூஇஸ்ஹாக், கதாதா, சுலைமான் அஃமஷ், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், மஸ்அர் பின் கதாம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஹைர் பின் முஆவியா, ஸாயிதா பின் குதாமா, ஸகரிய்யா பின் அபூஸாயிதா, ஸுஃப்யான் பின் உயைனா

வேறு பெயர்கள்: அபூஇஸ்ஹாக், அஸ்ஸபீஈ, அபூஇஸ்ஹாக் அல்ஹம்தானீ


ஆதாரம்: muslimscholars.info (11049) · Should verify


عَبْدُ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْهَيْثَمِ بْنِ حَنَشٍ،

أَنَّهُ رَأَى ابْنَ عُمَرَ وَصَلَّى مَعَهُ إِلَى جَنْبِهِ، فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ للَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، اللَّهُمَّ اجْعَلْكَ أَحَبَّ شَيْءٍ إِلَيَّ وَأَحْسَنَ شَيْءٍ عِنْدِي»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-2560.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-2471.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அல்ஹைஸம் பின் ஹனஷ் அவர்களின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளார். இவரிடமிருந்து அபூஇஸ்ஹாக் மட்டுமே அறிவித்துள்ளார் என கதீப் பக்தாதீ அவர்கள் கூறியுள்ளார்

(நூல்: லிஸானுல் மீஸான்-8303)

மேலும் பார்க்க: முஸ்லிம்-1052 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.