கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், தனது மனைவி(யரில் ஒருவரி)டம் இன்றைய நாள் சிறந்ததா? அல்லது நேற்றைய நாள் சிறந்ததா? என்று கேட்டார். அதற்கவர், “எனக்கு தெரியாது” என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், என்றாலும் எனக்குத் தெரியும். நேற்றைய தினம் இன்றைய தினத்தை விட சிறந்தது. இன்றைய தினம் நாளைய தினத்தை விட சிறந்தது. இவ்வாறே மறுமைநாள் வரை (வரும் முந்தைய நாட்கள் பிந்தைய நாட்களை விட சிறந்தது) என்று கூறினார்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 8773)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ الْأَزْدِيُّ، ثنا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، ثنا زَائِدَةُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، قَالَ:
قَالَ عَبْدُ اللهِ لِامْرَأَتِهِ: «الْيَوْمَ خَيْرٌ أَمْ أَمْسِ؟» فَقَالَتْ: لَا أَدْرِي، فَقَالَ: «لَكِنِّي أَدْرِي، أَمْسِ خَيْرٌ مِنَ الْيَوْمِ، وَالْيَوْمُ خَيْرٌ مِنْ غَدٍ، وَكَذَلِكَ حَتَّى تَقُومَ السَّاعَةُ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-8773.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-8689.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15145-கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள், இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்றோர் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/559, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/118)
எனவே இது பலவீனமான, மவ்கூஃபான அறிவிப்பாளர் தொடராகும்.
- என்றாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இதை சரியான அறிவிப்பாளர் தொடர் என்று கூறியுள்ளார். (நூல்: ஃபத்ஹுல் பாரீ-13/22)
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8551 .
சமீப விமர்சனங்கள்