தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3647

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

முத்தலிப் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு தடவை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், முஆவியா (ரலி) அவர்களிடம் வந்தார். அப்போது முஆவியா (ரலி), ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை கேட்டார். மேலும் (தன்னருகில் உள்ள) ஒருவரிடம் அந்த ஹதீஸை எழுதச் சொல்ல அவர் எழுதினார். உடனே ஸைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் கூறும் செய்திகளை எழுதவேண்டாம் என்று எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள் என்று கூறினார். எனவே (எழுதப்பட்ட) அந்த ஹதீஸை அவர் அழித்துவிட்டார்.

(அபூதாவூத்: 3647)

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ زَيْدٍ، عَنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ، قَالَ:

دَخَلَ زَيْدُ بْنُ ثَابِتٍ، عَلَى مُعَاوِيَةَ، فَسَأَلَهُ عَنْ حَدِيثٍ فَأَمَرَ إِنْسَانًا يَكْتُبُهُ، فَقَالَ لَهُ زَيْدٌ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا أَنْ لَا نَكْتُبَ شَيْئًا مِنْ حَدِيثِهِ» فَمَحَاهُ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3647.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-44647.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44647-முத்தலிப் பின் அப்துல்லாஹ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் ஹதீஸை கேட்கவில்லை என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1027)

2 . இந்தக் கருத்தில் ஸைத் பின் ஸாபித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-21579 , அபூதாவூத்-3647 , அல்முஃஜமுல் கபீர்-4871 ,

மேலும் பார்க்க: முஸ்லிம்-5734 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.