அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்.
என்னைப் பற்றி அறிவியுங்கள். தவறில்லை. யார் என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
ஹம்மாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ” என்று ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன் என இடம் பெற்றுள்ளது.
Book : 53
(முஸ்லிம்: 5734)حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
لَا تَكْتُبُوا عَنِّي، وَمَنْ كَتَبَ عَنِّي غَيْرَ الْقُرْآنِ فَلْيَمْحُهُ، وَحَدِّثُوا عَنِّي، وَلَا حَرَجَ، وَمَنْ كَذَبَ عَلَيَّ – قَالَ هَمَّامٌ: أَحْسِبُهُ قَالَ – مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
Muslim-Tamil-5734.
Muslim-TamilMisc-5326.
Muslim-Shamila-3004.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-5330.
- மேற்கண்ட நபிமொழியிலிருந்து ஹதீஸ்களை எடுத்துச் சொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்பதையும் அவற்றை எழுதுவதற்குத்தான் தடை விதித்தார்கள் என்பதையும் நாம் அறியமுடிகிறது. குர்ஆனுடன், ஹதீஸின் வாசகங்கள் கலந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் அதனை எழுத வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் குர்ஆனுடன் நபிமொழிகள் கலந்து விடாது என்ற அச்சம் தீர்ந்த உடன் நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதி கொடுத்து விட்டார்கள்.
பார்க்க: புகாரி-113 , 6880 ,
1 . இந்த செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸைத் பின் அஸ்லம் —> அதாஃ —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: அஹ்மத்-11085 , 11087 , 11158 , 11344 , 11536 , தாரிமீ-464 , 465 , முஸ்லிம்-5734 , திர்மிதீ-2665 , …
- அபுல் முதவக்கில் —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: அபூதாவூத்-3648 ,
2 . ஸைத் பின் ஸாபித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-3647 .
சமீப விமர்சனங்கள்