பாடம்:
கல்விச்சார்ந்த விஷயங்களை எழுதிவைப்பது வெறுப்பிற்குரியது என்று வந்துள்ளவை.
அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், (அவர்கள் கூறுவதை) எழுதிக்கொள்ள அனுமதி கேட்டோம். அதற்கவர்கள் அனுமதியளிக்கவில்லை.
அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)
(திர்மிதி: 2665)بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ كِتَابَةِ العِلْمِ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ:
«اسْتَأْذَنَّا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الكِتَابَةِ فَلَمْ يَأْذَنْ لَنَا»
«وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ أَيْضًا عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ» رَوَاهُ هَمَّامٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2665.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2608.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17804-ஸுஃப்யான் பின் வகீஃ நம்பகமானவர் என்றாலும் இவரின் நூலில் இவரின் எழுத்தாளர் மவ்கூஃபான செய்திகளை மர்ஃபூவாக மாற்றுவது உட்பட சில தவறுகளை செய்துவிட்டார் என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் கூறியுள்ளார். அபூஸுர்ஆ அவர்கள் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளார். இவருக்கு சொல்லிக்கொடுக்கும் செய்திகளில் தவறுசெய்துவிட்டார் என அறிஞர்கள் விமர்சிக்கின்றனர் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/62)
எனவே பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: முஸ்லிம்-5734 .
சமீப விமர்சனங்கள்