அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைஷிகளில் ஒரு இறைமறுப்பாளர் மரணித்துவிட்டால் அவரின் குடும்பத்தினர் அவருக்காக அழுதுக்கொண்டு அவரைப் பற்றி இவர் உணவழிப்பவர் ஆயிற்றே; இவர் விருந்தாளியை உபசரிப்பவர் ஆயிற்றே; இவர் வீரர் ஆயிற்றே என்று (இன்னபிற வார்த்தைகளைக்) கூறுவர். அவர்கள் அவ்வாறு கூறுவதால் அல்லாஹ் அவர்களுக்கு தண்டனையை மேலும் அதிகப்படுத்துகிறான்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 24373)
حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَسْوَدِ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ يُحَدِّثُ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
كَانَ الْكَافِرُ مِنْ كُفَّارِ قُرَيْشٍ يَمُوتُ فَيَبْكِيهِ أَهْلُهُ فَيَقُولُونَ: الْمُطْعِمُ، الْجِفَانَ، الْمُقَاتِلُ، الَّذِي فَيَزِيدُهُ اللَّهُ عَذَابًا بِمَا يَقُولُونَ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24373.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23816.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ நினைவாற்றல் சரியில்லாதவர், மூளை குழம்பியவர் என்ற அடிப்படையில் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.
- இவரிடமிருந்து சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகளே சரியானவை.
மேலும் பார்க்க: புகாரி-1286 .
சமீப விமர்சனங்கள்