அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பூமியில் வசிப்போரின் செயல்பதிவேடுகள், ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் வானில் இருப்போரிடம் நகல் எடுக்கப்படும். அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வொரு முஸ்லிமான மனிதருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-9278: 9278)حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ أَبَانَ الْأَصْبَهَانِيُّ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَمَّارٍ الرَّازِيُّ، ثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْمُقْرِئُ، نَا عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تُنْسَخُ دَوَاوِينُ أَهْلِ الْأَرْضِ فِي دَوَاوِينِ أَهْلِ السَّمَاءِ فِي كُلِّ اثْنَيْنٍ وَخَمِيسٍ، فَيُغْفَرُ لِكُلِّ مُسْلِمٍ لَا يُشْرَكُ بِاللَّهِ شَيْئًا إِلَّا رَجُلًا بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ مَنْصُورٍ إِلَّا عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ، وَلَا عَنْ عَمْرٍو إِلَّا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ، تَفَرَّدَ بِهِ مُحَمَّدُ بْنُ عَمَّارٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-9278.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-9511.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22833-அப்துஸ்ஸமத் பின் அப்துல்அஸீஸ் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-747 .
சமீப விமர்சனங்கள்