தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6396

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அந்த நாட்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான்; அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அப்போது “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள் என்று (வானவர்களுக்கு) கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த செய்தி மற்றொரு அறிவிப்பாளர்தொடரில் “இவ்விருவரும் சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்பதை இரண்டுதடவைகள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

(பைஹகீ-குப்ரா: 6396)

أَخْبَرَنَا أَبُو طَاهِرٍ الْفَقِيهُ، أنبأ حَاجِبُ بْنُ أَحْمَدَ الطُّوسِيُّ، ثنا عَبْدُ الرَّحِيمِ بْنُ مُنِيبٍ، ثنا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ الضَّبِّيُّ، أنبأ سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا إِلَّا امْرَأً بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ ” قَالَ: ” فَيُقَالُ: انْتَظِرْ هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا

وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي دَارِمٍ الْحَافِظُ بِالْكُوفَةِ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، فَذَكَرَهُ بِمَعْنَاهُ إِلَّا أَنَّهُ قَالَ: ” انْظُرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا مَرَّتَيْنِ

رَوَاهُ مُسْلِمٌ فِي الصَّحِيحِ عَنْ زُهَيْرِ بْنِ حَرْبٍ عَنْ جَرِيرٍ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6396.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-5904.




  • இதன் இரண்டுஅறிவிப்பாளர்தொடர்களில் ஒன்றில் வரும் ராவீ-22632-அப்துர்ரஹீம் பின் முனீப் யாரென அறியப்படாதவர்; மற்றொன்றில் வரும் ராவீ-5498-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் முஹம்மது
    பற்றி இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் விமர்சித்துள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான்-759).

எனவே இவ்விரண்டும் பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களாகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-747 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.