தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-3899

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

3899. அப்துல்லாஹ் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத் தந்த ஒரு வார்த்தையை உனக்கும் கற்றுத்தரவா?” என்று அபூஅய்யூப் (ரலி) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், “ஆம்” கற்றுத்தாருங்கள் எனது தந்தையின் சகோதரரே! என்று கூறினேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் (அடைக்கலமாக) தங்க வந்த சமயம், “சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை உமக்கு கற்றுத்தரட்டுமா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான், “ஆம்” அல்லாஹ்வின் தூதரே! “என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம்!  என்று கூறினேன். அப்போது அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்ற வார்த்தைகளை அதிகமாக கூறுவீராக! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஅய்யூப் (ரலி)

أبو أيوب الأنصاري

இறப்பு: ஹிஜ்ரி 52, குஸ்தன்தீனியா

தரம்: நபித்தோழர்


விபரங்கள்

இயற்பெயர்: காலித் பின் ஸைத்

தந்தை பெயர்: ஸைத் பின் குலைப்

வம்சம்: கஸ்ரஜ், பனூ மாலிக் பின் அன்நஜ்ஜார்

புனைப்பெயர்: அபூஅய்யூப்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஈராக், எகிப்து, குஸ்தன்தீனியா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 52, குஸ்தன்தீனியா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரலி அவர்களின் இயற்பெயர் காலித் பின் ஸைத் ஆகும். இவர் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அன்ஸாரீ நபித்தோழர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் வந்தபோது, அபூஅய்யூப் ரலி அவர்களின் வீட்டில்தான் ஒரு மாதம் தங்கினார்கள்.

பத்ரு, உஹது, அகழ் மற்றும் அனைத்துப் போர்களிலும் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார். முஆவியா ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் ரோமப் பகுதியில் போர் புரிந்துகொண்டிருந்தபோது ஹிஜ்ரி 52 ஆம் ஆண்டு குஸ்தன்தீனியாவில் மரணமடைந்தார். அவரது கப்ரு குஸ்தன்தீனியா கோட்டையின் சுவரருகே உள்ளது.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உபை பின் கஅப்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): பராஉ பின் ஆஸிப், ஜாபிர் பின் ஸம்ரா, ஸைத் பின் காலித் அல்ஜுஹ்னீ, இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ, மிக்ராத் பின் மஃதீகரிப், ஸயீத் பின் அல்முஸய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், மூஸா பின் தல்ஹா, அதா பின் யஸார், அப்துல்லாஹ் பின் ஹுனைன், அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா

வேறு பெயர்கள்: காலித் பின் ஸைத், அபூ அய்யூப் அல்அன்ஸாரீ


ஆதாரம்: muslimscholars.info (33) · Should verify


عَبْدُ اللهِ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِي أَيُّوبَ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ الْحَسَنِ الْخَفَّافُ الْمِصْرِيُّ، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ نَافِعٍ الطَّحَّانُ الْمِصْرِيُّ، قَالَا: ثنا أَحْمَدُ بْنُ صَالِحٍ، ثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ حُمْرَانَ، عَنْ خَارِجَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ قَالَ:

قَالَ لِي أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ: أَلَا أُعَلِّمُكَ كَلِمَةً عَلَّمَنِيهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قُلْتُ: بَلَى يَا عَمِّ، قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ نَزَلَ عَلَيَّ قَالَ: «أَلَا أُعَلِّمُكَ يَا أَبَا أَيُّوبَ كَلِمَةً مِنْ كَنْزِ الْجَنَّةِ؟» ، قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، قَالَ: «أَكْثِرْ مِنْ قَوْلِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-3899.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-3801.



…

மேலும் பார்க்க: அஹ்மத்-23552 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.