அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு (மறுமையில்) இரண்டு இருப்பிடங்கள் உண்டு. ஒன்று சொர்க்கத்தில் உள்ள இருப்பிடம். மற்றொன்று நரகத்தில் உள்ள இருப்பிடம். அவர் இறந்து நரகத்தில் நுழைந்தால் சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உள்ள அவரின் இருப்பிடத்திற்கு வாரிசாகுவார்கள். இதைப் பற்றியே “பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:10 ) என்ற அல்லாஹ்வின் சொல் குறிப்பிடுகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இந்த செய்தி (அல்ஹாபிழ் அபூஅப்தில்லாஹ் முஹம்மது பின் யஸீத் அல்கஸ்வீனீ என்னும்) இப்னு மாஜாவின் கடைசி செய்தியாகும்.
(இப்னுமாஜா: 4341)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَحْمَدُ بْنُ سِنَانٍ قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا لَهُ مَنْزِلَانِ: مَنْزِلٌ فِي الْجَنَّةِ، وَمَنْزِلٌ فِي النَّارِ، فَإِذَا مَاتَ، فَدَخَلَ النَّارَ، وَرِثَ أَهْلُ الْجَنَّةِ مَنْزِلَهُ، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ} [المؤمنون: 10] “
وهذا آخر سنن الإمام الحافظ أبي عبد الله محمد بن يزيد القزويني.
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4341.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-4340.
- மேற்கண்ட செய்தியின் பொருள் சிலருக்கு குழப்பமாக இருந்தால் அதற்கு கீழ்கண்டவாறு பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது.
(நம்பிக்கை கொண்ட) உங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு மறுமையில் இரண்டு இருப்பிடங்கள் (கிடைக்க வாய்ப்பு) உண்டு. ஒன்று சொர்க்கத்தில் இருக்கலாம். அல்லது நரகத்தில் இருக்கலாம். அவர் இறந்து (சில பாவங்களுக்காக) நரகத்தில் நுழைந்தாலும் அவர் சொர்க்கவாசி என்றால் சில காலங்களுக்கு பின் சொர்க்கத்திற்கு வாரிசாகுவார். இதைப் பற்றியே “பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:10 ) என்ற வசனம் குறிப்பிடுகிறது). ஆனால் இது தவறாகும்.
- காரணம் இந்தக்கருத்தில் வரும் மற்ற செய்திகளைப் பார்க்கும் போது அனைவருக்கும் சொர்க்கத்திலும், நரகத்திலும் இருப்பிடம் அமைக்கப்படுகிறது.
- ஒருவர் சொர்க்கவாசியாக இருந்து ஆரம்பத்திலேயே சொர்க்கம் செல்வார் என்றால் (நரகில் உள்ள அவரின் இருப்பிடம் இடிக்கப்பட்டுவிடும்…ஆய்வில்) அல்லது அவரின் நரகத்தின் இருப்பிடத்தில் வேறு நரகவாசிகளை அல்லாஹ் வைத்துவிடுவான்.
- ஒருவர் நரகவாசி என்றால் சொர்க்கத்தில் இருக்கும் அவரின் இருப்பிடத்திற்கு அல்லாஹ் வேறு சொர்க்கவாசிகளை கொண்டுவருவான்.
(நூல்: தஃப்ஸீரு இப்னு கஸீர்-5/464, ஃபத்ஹுல் பாரீ-11/442)
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-5342 , புகாரி-6569 , 1338 ,
சமீப விமர்சனங்கள்