ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10093)حَدَّثَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ السَّامِيُّ الْكُوفِيُّ، ثنا أَبُو كُرَيْبٍ، ثنا مُخْتَارُ بْنُ غَسَّانَ، عَنْ قَيْسِ بْنِ الرَّبِيعِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10093.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-9952.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34365-கைஸ் பின் ரபீஉ பற்றி ஷுஃபா, ஸவ்ரீ போன்ற இன்னும் சில அறிஞர்கள் இவர் பலமானவர் என்று கூறியிருந்தாலும் வகீஃ, இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். - யஃகூப் பின் அபூஷைபா அவர்கள், இவர் நம்முடையை தோழர்களிடம் நம்பகமானவர்; அவர் எழுதிவைத்திருந்தவை சரியானது; என்றாலும் மிகவும் நினைவாற்றல் சரியில்லாதவர்; அதிகம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
- இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
போன்றோர் இவரின் நூலில் இவரின் மகன் அழித்தல் திருத்தல் செய்து இவரின் நூலை வீணாக்கி விட்டார். அதனால் மக்கள் (அறிஞர்கள்) இவரின் ஹதீஸ்களை விட்டுவிட்டனர் என்று கூறியுள்ளனர். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவரின் அதிகமான அறிவிப்புகள் சரியாகவே உள்ளன. இவர் விசயத்தில் ஷுஃபா அவர்களின் கூற்றே சரி. இவர் (என்னிடத்தில்) சுமாரானவர் என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் வயதான காலத்தில் இவரின் நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இவரின் ஹதீஸ்களில் இவரின் மகன் இடைச்செருகல் செய்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/447, தக்ரீபுத் தஹ்தீப்-1/804)…
6 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10093 ,
சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-5392 .
சமீப விமர்சனங்கள்