தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17156

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

17156. திண்ணை ஸஹாபாக்களில் ஒருவரான இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு மூன்று முறையும், இரண்டாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு ஒரு தடவையும் (ஸலவாத்) பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)

ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்)

جبير بن نفير الحضرمي

இறப்பு: ஹிஜ்ரி 80 அல்லது அதற்குப் பிறகு, ஷாம்

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஜுபைர் பின் நுஃபைர் பின் மாலிக் பின் ஆமிர்

தந்தை பெயர்: நுஃபைர் பின் மாலிக் அல்ஹழ்ரமீ

வம்சம்: அல்ஹழ்ரமீ

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான், அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: ஹிம்ஸ், ஹழ்ரமவ்த்

பயணித்த ஊர்கள்: ஹிஜாஸ், ஷாம்

பிறப்பு: யமன்/ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 80 அல்லது அதற்குப் பிறகு, ஷாம்

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அவர் நபி (ஸல்) அவர்களின் காலத்தை அடைந்தவர், ஆனால் நபித்தோழர் அல்ல. அவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவினார். அவர் ஷாம் மற்றும் ஹிஜாஸ் பகுதிகளில் வாழ்ந்தார்.

அவர் ஹிஜ்ரி 80 அல்லது அதற்குப் பிறகு ஷாம் பகுதியில் மரணமடைந்தார். அவர் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி), உமர் பின் கத்தாப் (ரலி), நுஃபைர் பின் மாலிக் அல்ஹழ்ரமீ (ரலி), அபூ தர் அல்ஃகிஃபாரீ (ரலி), அபூ தர்ரா (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), இப்னு உமர் (ரலி), முஆவியா பின் அபூஸுஃப்யான் (ரலி), மிக்ராத் பின் அஸ்வத் (ரலி), ஆயிஷா (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் பின் நுஃபைர், காலித் பின் மஃதான், மக்ஹூல் அஷ்ஷாமீ, அபூஸ்ஸாஹிரிய்யா அல்ஹிம்ஸீ, ஹபீப் பின் உபைத், ஸஃப்வான் பின் அம்ர், ரபீஆ பின் யஸீத், ஸைத் பின் அர்தாஅ, ஸுலைம் பின் ஆமிர், ஷுரைஹ் பின் உபைத், அல்வலீத் பின் அப்துர்ரஹ்மான் அல்ஜுரஷீ, அபூ இத்ரீஸ் அஸ்ஸகூனீ

வேறு பெயர்கள்: ஜுபைர் பின் நுஃபைர் அல்ஹழ்ரமீ, அபூ அப்துர்ரஹ்மான், அபூ அப்துல்லாஹ்


ஆதாரம்: muslimscholars.info (4097) · Should verify


حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، حَدَّثَهُ، أَنَّ جُبَيْرَ بْنَ نُفَيْرٍ، حَدَّثَهُ، أَنَّ الْعِرْبَاضَ، حَدَّثَهُ – وَكَانَ الْعِرْبَاضُ بْنُ سَارِيَةَ مِنْ أَصْحَابِ الصُّفَّةِ – قَالَ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى الصَّفِّ الْمُقَدَّمِ ثَلَاثًا، وَعَلَى الثَّانِي وَاحِدَةً»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17156.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16823.



மேலும் பார்க்க: இப்னு மாஜா-996 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.