தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-996

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

(கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையில் நின்று தொழுவதின் சிறப்பு.

996. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு மூன்று தடவையும், இரண்டாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு ஒரு தடவையும் பாவமன்னிப்பு கேட்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

இர்பாள் பின் ஸாரியா (ரலி)

العرباض بن سارية

இறப்பு: ஹிஜ்ரி 75, ஷாம்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: இர்பாள் பின் ஸாரியா அஸ்ஸலமீ

தந்தை பெயர்: ஸாரியா

வம்சம்: அஸ்ஸலமீ

புனைப்பெயர்: அபூ நஜீஹ்

ஊர் பெயர்: ஹிம்ஸ்

பயணித்த ஊர்கள்: ஹிஜாஸ், ஹிம்ஸ், ஷாம்

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 75, ஷாம்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இர்பாள் பின் ஸாரியா அஸ்ஸலமீ ரலி அவர்கள் ஒரு நபித்தோழர் (ஸஹாபி) ஆவார். இவர்களின் குன்யா அபூ நஜீஹ் ஆகும். ஹிஜாஸில் பிறந்த இவர், ஹிம்ஸ் மற்றும் ஷாம் பகுதிகளில் வாழ்ந்தார்.

ஹிஜ்ரி 75 ஆம் ஆண்டு ஷாமில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் நபி (ஸல்), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): உம்மு ஹபீபா பின்த் அபீ ஸுஃப்யான், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அஸ்ஸலமீ, ஸயீத் பின் ஹானி அல்ஃகவ்லானீ, ஜுபைர் பின் அபூ ஸுலைமான், ஹஜ்ர் பின் ஹஜ்ர் அல்கலாஈ, ஹகீம் பின் உமைர், அப்துல்லாஹ் பின் அபீ பிலால், அபூ ரஹ்ம் அஸ்ஸமாஈ, யஹ்யா பின் அபூ அல்மதாஃ


ஆதாரம்: muslimscholars.info (5172) · Should verify


بَابُ فَضْلِ الصَّفِّ الْمُقَدَّمِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَنْبَأَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَسْتَغْفِرُ لِلصَّفِّ الْمُقَدَّمِ ثَلَاثًا وَلِلثَّانِي مَرَّةً»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-996.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-986.



  • இந்த செய்தி காலித் பின் மஃதான் —> ஜுபைர் பின் நுஃபைர் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளதே சரியானதாகும்.
  • இருவருக்கிடையில் ஜுபைர் பின் நுஃபைர் விடுபட்டுவரும் அறிவிப்பாளர்தொடர் முன்கதிஃ ஆகும்.
  • எனவே மேற்கண்ட இப்னு மாஜா-996 இல் வரும் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது.
  • சிலர் காலித் பின் மஃதான், முதலில் ஜுபைர் பின் நுஃபைரிடமும், பிறகு இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமும் கேட்டு அறிவித்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளனர்…(காரணம் இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களுக்கு முன்பே மரணித்த சில நபித்தோழர்களிடம் இவர் ஹதீஸ்களை கேட்டுள்ளார். எனவே இவரிடம் இந்த ஹதீஸைக் கேட்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.)

1 . இந்தக் கருத்தில் இர்பாள் பின் ஸாரியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • காலித் பின் மஃதான் —> ஜுபைர் பின் நுஃபைர் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பார்க்க: அஹ்மத்-17156 , 17157 , 17162 , தாரிமீ-1301 , நஸாயீ-817 ,

  • காலித் பின் மஃதான் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பார்க்க: அஹ்மத்-17141 , 17148 , தாரிமீ-1300 , இப்னு மாஜா-996 ,

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8623 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.