பாடம்:
(கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையில் நின்று தொழுவதின் சிறப்பு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு மூன்று தடவையும், இரண்டாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு ஒரு தடவையும் பாவமன்னிப்பு கேட்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி)
(இப்னுமாஜா: 996)بَابُ فَضْلِ الصَّفِّ الْمُقَدَّمِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَنْبَأَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَسْتَغْفِرُ لِلصَّفِّ الْمُقَدَّمِ ثَلَاثًا وَلِلثَّانِي مَرَّةً»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-996.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-986.
- இந்த செய்தி காலித் பின் மஃதான் —> ஜுபைர் பின் நுஃபைர் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளதே சரியானதாகும்.
- இருவருக்கிடையில் ஜுபைர் பின் நுஃபைர் விடுபட்டுவரும் அறிவிப்பாளர்தொடர் முன்கதிஃ ஆகும்.
- எனவே மேற்கண்ட இப்னு மாஜா-996 இல் வரும் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது.
- சிலர் காலித் பின் மஃதான், முதலில் ஜுபைர் பின் நுஃபைரிடமும், பிறகு இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமும் கேட்டு அறிவித்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளனர்…(காரணம் இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களுக்கு முன்பே மரணித்த சில நபித்தோழர்களிடம் இவர் ஹதீஸ்களை கேட்டுள்ளார். எனவே இவரிடம் இந்த ஹதீஸைக் கேட்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.)
1 . இந்தக் கருத்தில் இர்பாள் பின் ஸாரியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- காலித் பின் மஃதான் —> ஜுபைர் பின் நுஃபைர் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)
பார்க்க: அஹ்மத்-17156 , 17157 , 17162 , தாரிமீ-1301 , நஸாயீ-817 ,
- காலித் பின் மஃதான் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)
பார்க்க: அஹ்மத்-17141 , 17148 , தாரிமீ-1300 , இப்னு மாஜா-996 ,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8623 .
சமீப விமர்சனங்கள்