தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2018

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இப்னுமாஜா: 2018)

حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْحِمْصِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْوَلِيدِ الْوَصَّافِيِّ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ الطَّلَاقُ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2018.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2008.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் முஹாரிப் பின் திஸாரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-27308-உபைதுல்லாஹ் பின் வலீத் என்பவர் பற்றி அபூஸுர்ஆ, அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்றும்; இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும்; பலவீனமானவர் என்றும்; நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அம்ர் பின் அலீ போன்றோர், இவர் கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர். மேலும் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள், இவர் முஹாரிப் வழியாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் விமர்சித்துள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/30)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • இந்த செய்தியை முஹாரிப் பின் திஸாரிடமிருந்து வேறு சிலரும் அறிவித்துள்ளனர்.

1 . முஅர்ரிஃப் பின் வாஸில்.

இவரிடமிருந்து 5 அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

1 . முஹம்மத் பின் காலித்,

2 . வகீஃ பின் அல்ஜர்ராஹ்,

3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யூனுஸ்,

4 . யஹ்யா பின் புகைர்.

5 . அபூநுஐம்.

1 . இவர்களில் முஹம்மத் பின் காலித் என்பவர் மட்டும் தான் (முஅர்ரிஃப் பின் வாஸில் —> முஹாரிப் பின் திஸார் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) —> நபி (ஸல்) அவர்கள்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் கூறியுள்ளார். இவர் ஸதூக் என்ற தரத்தில் உள்ளவர்.

2 . ஆனால் மற்ற 4 நபர்களும் (முஅர்ரிஃப் பின் வாஸில் —> முஹாரிப் பின் திஸார் —> நபி (ஸல்) அவர்கள்) என்ற அறிவிப்பாளர்தொடரில் (நபித்தோழரைக் கூறாமல்) முர்ஸலாக அறிவித்துள்ளனர். இவர்கள் ஸிகத்-பலமானவர் என்ற தரத்தில் உள்ளவர்கள். (பார்க்க: அபூதாவூத்-2177)

  • எனவே பலமானவர்கள் இந்த செய்தியை நபித்தோழர் கூறப்படாமல் முர்ஸலாக அறிவித்திருப்பதால் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் இதை முர்ஸல் என்று கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-1297)


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (13/ 225)
3123- وَسُئِلَ عَنْ حَدِيثِ مُحَارِبِ بْنِ دَثَّارٍ، عَنْ ابْنِ عُمَرَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم أبغض الحلال إلى الله الطلاق.
فقال: يرويه عبيد الله بن الوليد الوصافي، عن محارب كذلك.
ورواه معرف بن واصل، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ مُحَمَّدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ، عن معرف، عن محارب، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم.
ورواه أبو نعيم، عن معرف، عن محارب مُرْسَلًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
والمرسل أشبه.

  • இதன் அறிவிப்பாளர்தொடர்களைக் கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இது முர்ஸல் என்பதே உண்மை என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-3123, 13/225)


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2018 , அபூதாவூத்-2178 , அல்முஃஜமுல் கபீர்-13813 , ஹாகிம்-2794 , குப்ரா பைஹகீ-14894 ,

2 . முஹாரிப் பின் திஸார் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2177 .

3 . முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-11331 .

4 . அபூஉபைதா பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-13270 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அக்பாரு அஸ்பஹான்-240 ,

1 comment on Ibn-Majah-2018

  1. இப்னு அபி அபூஹாதிம் கூறுகிறார்கள்

    இந்த செய்தி முஹாரிப் அவர்கள், நபி ﷺ வழியாக அறிவித்துள்ளார்கள் அதனால் இது முர்ஸல் என்று என் தந்தை அபூஹாதிம் கூறினார்கள்

    அல் இலல்-(1/431)

    தாரகுத்னீ அவர்கள் இது முர்ஸல் என்பதே உண்மை என்று கூறியுள்ளார்.

    அல் இலல்-(13/225)

    பைஹகீ அவர்கள் இது முர்ஸல் என்பதே சரியானது என்று கூறியுள்ளார்கள்

    அல் சுனன் அல் குப்ரா-7/322

    இப்னு அப்துல் ஹாதி அவர்கள் இவ்விசயத்தில் முர்ஸல் என்பதே மிக சரியானது என்று கூறியுள்ளார்கள்

    அல் முஹர்ரீர் ஃபில் ஹதீத்-(1/567)

    அல் ஷகரீ அவர்கள் இது முர்ஸல் என்பதே உண்மை என்று எண்ணுகிறேன் என்று கூறுகிறார்கள்

    அல் மகாஷித் அல் ஹஸனா-11

    கத்தாபீ மற்றும் முந்தரி ஆகியோர் இது முர்ஸல் என்பதே உண்மை என்று கூறியுள்ளார்

    முக்தஸ்ஸர் அல் சுனன்-3/92

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.