தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1014

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 22

தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்காரும் முறையும், அப்போது தொடைகள் மீது இரு கைகளை வைக்கும் முறையும்.

1014. அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்காரும்போது, (தவர்ருக் முறையில் அதாவது) “தமது இடது பாதத்தை (வலது)தொடைக்கும் கணுக்காலுக்கும் இடையே (அவற்றுக்குக் கீழே) வைத்து, வலது பாதத்தை விரித்து (படுக்க) வைப்பார்கள்”.

தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும், வலக் கையை வலது தொடையின் மீதும் வைத்துத் தமது (ஆட்காட்டி) விரலால் சைகை செய்வார்கள்.

அத்தியாயம்: 5

(முஸ்லிம்: 1014)

21 – بَابُ صِفَةِ الْجُلُوسِ فِي الصَّلَاةِ، وَكَيْفِيَّةِ وَضْعِ الْيَدَيْنِ عَلَى الْفَخْذَيْنِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرِ بْنِ رِبْعِيٍّ الْقَيْسِيُّ، حَدَّثَنَا أَبُو هِشَامٍ الْمَخْزُومِيُّ، عَنْ عَبْدِ الْوَاحِدِ وَهُوَ ابْنُ زِيَادٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ، حَدَّثَنِي عَامِرُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، قَالَ

«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَعَدَ فِي الصَّلَاةِ، جَعَلَ قَدَمَهُ الْيُسْرَى بَيْنَ فَخِذِهِ وَسَاقِهِ، وَفَرَشَ قَدَمَهُ الْيُمْنَى، وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَأَشَارَ بِإِصْبَعِهِ»


Muslim-Tamil-1014.
Muslim-TamilMisc-909.
Muslim-Shamila-909.
Muslim-Alamiah-909.
Muslim-JawamiulKalim-914.



 

 


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . உஸ்மான் பின் ஹகீம் அவர்களின் வழியாக வரும் செய்திகள்:

  • உஸ்மான் பின் ஹகீம் —> ஆமிர் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

பார்க்க: முஸ்லிம்-1014, அபூதாவூத்-988, முஸ்னத் பஸ்ஸார்-2206, இப்னு குஸைமா- 696, முஸ்தக்ரஜ்-அபூஅவானா-2001, 2002,


2 . இப்னு அஜ்லான், ஸியாத் பின் ஸஃத் ஆகியோரின் வழியாக வரும் செய்திகள்:

  • அபூகாலித், லைஸ் பின் ஸஃத் —> இப்னு அஜ்லான் —> ஆமிர் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 8441, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-99, முஸ்லிம்-1015, இப்னு ஹிப்பான்- 1943, தாரகுத்னீ- 1324, குப்ரா பைஹகீ- 2783,


  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    —> இப்னு அஜ்லான் —> ஆமிர் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

பார்க்க: அஹ்மத்- 16099, அபூதாவூத்-990, குப்ரா நஸாயீ- 1199, நஸாயீ-1275, இப்னு குஸைமா- 718, முஸ்தக்ரஜ்-அபூஅவானா-2018, இப்னு ஹிப்பான்- 1944, குப்ரா பைஹகீ- 2790,


  • இப்னு உயைனா —> இப்னு அஜ்லான், ஸியாத் பின் ஸஃத்  —> ஆமிர் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-903, தாரிமீ-1377,


  • முஸ்னத் ஹுமைதீ-903.

903 – حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ: ثنا سُفْيَانُ، قَالَ: ثنا زِيَادُ بْنُ سَعْدٍ، وَمُحَمَّدُ بْنُ عَجْلَانَ، أَنَّهُمَا سَمِعَا عَامِرَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ يُحَدِّثُ، عَنْ أَبِيهِ، أَنَّهُ «رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو فِي الصَّلَاةِ هَكَذَا» وَقَبَضَ الْحُمَيْدِيُّ أَصَابِعَهُ الْأَرْبَعَةَ وَأَشَارَ بِالسَّبَّابَةِ
قَالَ أَبُو عَلِيٍّ يَعْنِي بِشْرَ بْنَ مُوسَى: «أَبُو بَكْرٍ الَّذِي وَصَفَ لَنَا» ،
قَالَ الْحُمَيْدِيُّ: وَقَالَ سُفْيَانُ: ” وَكَانَ زِيَادُ بْنُ سَعْدٍ قَدْ حَدَّثَنِي بِأَرْبَعَةٍ سَمَاعَ ابْنِ الزُّبَيْرِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَوَيْتُهُ فَنَسِيتُهُ إِلَّا هَذَا، فَقَالَ لِي زِيَادٌ: إِنَّمَا هِيَ أَرْبَعَةٌ “


  • ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத் —> இப்னு ஜுரைஜ் —> ஸியாத் பின் ஸஃத் —> இப்னு அஜ்லான் —> ஆமிர் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

பார்க்க: அபூதாவூத்-989, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1270, முஸ்தக்ரஜ்-அபூஅவானா-2019, அல்முஃஜமுல் கபீர்-238,


3 . மக்ரமா பின் புகைர் அவர்களின் வழியாக வரும் செய்திகள்:

  • மக்ரமா பின் புகைர் —> ஆமிர் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

பார்க்க: குப்ரா நஸாயீ-749, நஸாயீ-1161, குப்ரா பைஹகீ- 2791,


2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1018.


 


1 . இஷாரா செய்தல் பற்றிய ஹதீஸ்கள்:

பார்க்க: முஸ்லிம்-1014.


2 . விரலசைத்தல் பற்றிய ஹதீஸ்கள்:

பார்க்க: அஹ்மத்-18870.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.