தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-3715

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

“மறுமைநாளுக்கு முன், மக்களை ஏமாற்றும் சில வருடங்கள் வரும். அப்போது பொய்யர், உண்மையாளராக கருதப்படுவார்; உண்மையாளர், பொய்யராக கருதப்படுவார். மோசடிக்காரர், நம்பிக்கையாளராக கருதப்படுவார்.

அப்போது (மக்கள் விசயம் பற்றி) ருவைபிளாவும் பேசுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (மக்கள்) அவர்களிடம், “ருவைபிளா” என்றால் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், “பாவியானவன் மக்கள் விசயம் பற்றி பேசுவான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 

(abi-yala-3715: 3715)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ بَيْنَ يَدَيِ السَّاعَةِ سِنِينَ خَوَادِعَةً، يُصَدَّقُ فِيهَا الْكَاذِبُ، وَيُكَذَّبُ فِيهَا الصَّادِقُ، وَيُؤْتَمَنُ فِيهَا الْخَائِنُ، وَيَتَكَلَّمُ فِيهَا الرُّوَيْبِضَةُ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الرُّوَيْبِضَةُ؟ قَالَ: «الْفُوَيْسِقُ يَتَكَلَّمُ فِي أَمْرِ الْعَامَّةِ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-3715.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-.




(குறிப்பு: இந்தச் செய்தியின் இறுதிப்பகுதியின் வாக்கியத்துக்கு, தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுவது என்றும் பொருள் கொள்ளலாம்.)


இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியில் வரும் ருவைபிளா என்பதின் பொருள் பற்றி பலவாறு கூறப்பட்டுள்ளது…

1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மத் பின் இஸ்ஹாக் —> அப்துல்லாஹ் பின் தீனார் —> அனஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-3715 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-,

  • முஹம்மத் பின் இஸ்ஹாக் —> முஹம்மத் பின் முன்கதிர் —> அனஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-,

  • அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் —> அப்துல்லாஹ் பின் அபூதல்ஹா —> அனஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

மேலும் பார்க்க: இப்னு மாஜா-4036 .

3 . அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

மேலும் பார்க்க:

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.