தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4036

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

“(ஒரு காலத்தில்) மக்களை ஏமாற்றும் சில வருடங்கள் வரும். அப்போது பொய்யர், உண்மையாளராக கருதப்படுவார்; உண்மையாளர், பொய்யராக கருதப்படுவார். மோசடிக்காரர், நம்பிக்கையாளராக கருதப்படுவார்; நம்பிக்கையாளர், மோசடிக்காரராக கருதப்படுவார். அப்போது (மக்கள் விசயம் பற்றி) ருவைபிளாவும் பேசுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “ருவைபிளா” என்றால் யார்? என வினவப்பட்டது. அதற்கவர்கள், “மக்கள் நிலைப் பற்றி சரியாக அறியாத மனிதன் (குறைமதியாளன் அவர்களின் விசயம் பற்றி பேசுவான்”) என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 4036)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ قُدَامَةَ الْجُمَحِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ أَبِي الْفُرَاتِ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«سَيَأْتِي عَلَى النَّاسِ سَنَوَاتٌ خَدَّاعَاتُ، يُصَدَّقُ فِيهَا الْكَاذِبُ، وَيُكَذَّبُ فِيهَا الصَّادِقُ، وَيُؤْتَمَنُ فِيهَا الْخَائِنُ، وَيُخَوَّنُ فِيهَا الْأَمِينُ، وَيَنْطِقُ فِيهَا الرُّوَيْبِضَةُ» ، قِيلَ: وَمَا الرُّوَيْبِضَةُ؟ قَالَ: «الرَّجُلُ التَّافِهُ فِي أَمْرِ الْعَامَّةِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4036.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-4034.




(குறிப்பு: மக்களை ஏமாற்றும் வருடம் என்பதற்கு சில ஹதீஸ்விளக்கவுரையாளர்கள், “குறைந்த அளவு மழை பெய்வது” என்றும் “அதிக மழை பெய்தும் குறைந்த பலன் ஏற்படுவது” என்றும் பொருள் கூறியுள்ளனர்)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-7029-இஸ்ஹாக் பின் அபுல்ஃபுராத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று மஸ்லமா பின் காஸிம் அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்காஷிஃப்-2/101, தஹ்தீபுத் தஹ்தீப்-1/126, தக்ரீபுத் தஹ்தீப்-1/131)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். இந்தச் செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த வேறுஅறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.

(பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3715)


அல்லாஹ்வுக்கு உருவம் உள்ளது என்ற கொள்கையால் மஸ்லமாவை சிலர் விமர்சித்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இவரின் எதிரிகள் தான் இவர் பற்றி இவ்வாறு கூறினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: லிஸானுல் மீஸான்-7737)


2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ —> அபூஸயீத் அல்மக்புரீ (கைஸான்) —>அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: அஹ்மத்-, ஹாகிம்-,

  • ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: இப்னு மாஜா-4036 ,

  • ஃபுலைஹ் பின் ஸுலைமான் —> ஸயீத் பின் உபைத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: அஹ்மத்-,


மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3715 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.