தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-4242

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒரு முதியவர் ஒரு தேவையின் நிமித்தமாக நபி (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார். அவருக்கு இடமளிக்க மக்கள் தாமதித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(abi-yala-4242: 4242)

حَدَّثَنَا مُوسَى بْنُ مُحَمَّدِ بْنِ حَيَّانَ، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ وَاقِدٍ، حَدَّثَنَا زُرْبِيٌّ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ:

جَاءَ شَيْخٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَتِهِ فَأَبْطَئُوا عَنِ الشَّيْخِ أَنْ يُوَسِّعُوا لَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُوَقِّرْ كَبِيرَنَا»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4242.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4183.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ உபைத் பின் வாகித் பலவீனமானவர்; ராவீ ஸர்பிய்யு பின் அப்துல்லாஹ் முன்கருல் ஹதீஸ் என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார்…

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/653, 1/337)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-1919 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.