தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-6644

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

6644. இறைநம்பிக்கையாளர் தனது மண்ணறையில் சொர்க்கத்தின் பூங்காவில் இருப்பார். அவருக்காக அவரின் மண்ணறையை 70 முழம் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்படும். மேலும் அதில் பவுர்ணமி இரவின் நிலவைப்போன்ற வெளிச்சம் ஏற்படுத்தப்படும்.

“எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்” (அல்குர்ஆன்: 20:124) என்ற இந்த இறைவசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்கு தெரியுமா? நெருக்கடியான வாழ்க்கை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும், அவனது தூதருமே மிக அறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.

இறைமறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யப்படுவதை இந்த வசனம் குறிப்பிடுகிறது.

எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அவனுக்கு எதிராக தொண்னூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள் வரை அவனுடைய உடம்பில் அவை ஊதிக் கொண்டும், கொத்திக் கொண்டும், காயப்படுத்திக் கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا السَّمْحِ، حَدَّثَهُ عَنِ ابْنِ حُجَيْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«الْمُؤْمِنُ فِي قَبْرِهِ فِي رَوْضَةٍ، وَيُرَحَّبُ لَهُ قَبْرُهُ سَبْعِينَ ذِرَاعًا، وَيُنَوَّرُ لَهُ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، أَتَرَوْنَ فِيمَا أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ»: {فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا، وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى} [طه: 124]، قَالَ: «أَتَدْرُونَ مَا الْمَعِيشَةُ الضَّنْكُ؟»، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «عَذَابُ الْكَافِرِ فِي قَبْرِهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُ لَيُسَلَّطُ عَلَيْهِمْ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا، أَتَدْرُونَ مَا التِّنِّينُ؟»، قَالَ: «تِسْعَةٌ وَتِسْعُونَ حَيَّةً لِكُلِّ حَيَّةٍ سَبْعَةُ رُءُوسٍ يَنْفُخُونَ فِي جِسْمِهِ وَيَلْسَعُونَهُ، وَيَخْدِشُونَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-6644.
Abi-Yala-Shamila-6644.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-6606.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூயஃலா இமாம்

2 . அப்துல்லாஹ் பின் அபூமூஸா-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஈஸா

3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்

4 . அம்ர் பின் ஹாரிஸ்

5 . அபுஸ்ஸம்ஹ்-அப்துல்லாஹ் பின் ஸம்ஹ்-தர்ராஜ்

5 . அப்துர்ரஹ்மான் பின் ஹுஜைரா

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24059-தர்ராஜ் பின் ஸம்ஆன்-அபுஸ்ஸம்ஹ்-அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம், நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர், இவரின் ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட்டவை என்றும்,
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும் கைவிடப்பட்டவர் என்றும்,
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவரை பலமானவர் என்று கூறியுள்ளதாக ஃபள்லக் அர்ராஸீ அவர்களிடம் கூறப்பட்டபோது, இவர் பலமானவர் அல்ல என்றும்; எந்த சிறப்பும் அல்ல என்றும்,
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரின் ஹதீஸ்களில் சிறிது பலவீனம் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
  • ஸாஜீ, உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அபுல்அரப் போன்றோர் இவரை பலவீனமானவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2008, தஹ்தீபுத் தஹ்தீப்-1/574, அல்இக்மால்-1473, தாரீகுல் இஸ்லாம்-3/405)

  • இப்னுமயீன், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஹாகம், இப்னு கல்ஃபூன்,பிறப்பு ஹிஜ்ரி 555
    இறப்பு ஹிஜ்ரி 636
    வயது: 81
    இப்னு ஷாஹீன்,பிறப்பு ஹிஜ்ரி 298
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 87
    அபுல்காஸிம் போன்றோர் இவர் பலமானவர் என்றும்,
  • உஸ்மான் பின் ஸயீத், இப்னு யூனுஸ் போன்றோர் இவர் ஸதூக்-நம்பகமானவர் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2008, தஹ்தீபுத் தஹ்தீப்-1/574, அல்இக்மால்-1473, தாரீகுல் இஸ்லாம்-3/405)


  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் அவர்கள், இவர் அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகளில் தான் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளதாக இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    குறிப்பிட்டுள்ளார். இவ்வாறே அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், இவர் அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்தியைத் தவிர மற்றவை சரியானது என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவரின் சில ஹதீஸ்களை குறிப்பிட்டு இவைகளை இவர் தனித்து அறிவிக்கிறார்; இவைகளில் சிலவை முன்கர் என்று கூறிவிட்டு இதல்லாத மற்ற செய்திகள் பரவாயில்லை என்று கூறியுள்ளார். (இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், கூறும் செய்திகளில் மேற்கண்ட செய்தி இடம்பெறவில்லை)

(நூல்கள்: அல்காஷிஃப்-2/380, தஹ்தீபுத் தஹ்தீப்-1/574, தக்ரீபுத் தஹ்தீப்-1833, அல்இக்மால்-1473, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-647)


الكامل في ضعفاء الرجال (4/ 15):
قال الشيخ: وعامة هذه الأحاديث التي أمليتها
مما لا يتابع دراج عليه
وفيها ما قد روى عن غيره ومن غير هذا الطريق
ولدراج، عنِ ابْن حر وأبي الهيثم، وابن حجيرة غير ما ذكرت من الحديث ويروي عن دراج عَمْرو بْن الحارث، وابن لَهِيعَة وحيوة بْن شريح وغيرهم
ومما ينكر من أحاديثه بعض ما ذكرت، وَهو قوله أصدق الرؤيا بالأسحار والشتاء ربيع المؤمن والسباع حرام وأكثروا من ذكر اللَّه حتى يقال مجنون وقد روى عنه بهذا الإسناد أَيضًا لا حليم إلَاّ ذو عثرة عن عَمْرو عَنْ دَرَّاجٍ، عَن أَبِي الْهَيْثَمِ، عَن أبي سَعِيد يرويه، عنِ ابْن وهب الغرباء
وقد تقدم ذكر من حدثناه، ومَنْ رواه، عنِ ابْن وهب في باب الحاء في ذكر حرملة بْن يَحْيى وسائر أخبار دراج غير ما ذكرت من هذه الأحاديث يتابعه الناس عليها
وأرجو أن أخرجت دراج وبرأته من هذه الأحاديث التي أنكرت عليه إن سائر أحاديثه لا بأس بها ويقرب صورته ما قال فيه يَحْيى بْن مَعِين

…


  • இவரைப் பற்றி பலவிமர்சனங்கள் இருந்தாலும் இதை ஆய்வு செய்த இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர்; என்றாலும் இவர் அறிவிக்கும் அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1833)

வேறு சில அறிஞர்கள் இவரின் அனைத்து செய்திகளும் முன்கர்-மறுக்கப்படவேண்டியவை என்றும் கூறியுள்ளனர். இதற்கான காரணம் இவர் அறிவித்த செய்திகளின் கருத்தை மற்ற பலமானவர்களின் செய்திகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இவர் மாறுபட்டும், தனித்தும் அறிவித்துள்ளார். இதனால் தான் இவரை ஆரம்பத்தில் சிலர் குறிப்பிட்ட அறிவிப்பாளர்தொடரில் பலவீனமானவர் என்று கூறிவிட்டு பிறகு இவரை பொதுவாக முன்கருல் ஹதீஸ் என்றும், விடப்பட்டவர் என்றும் கருத்துக் கூறியுள்ளனர். இதற்கு தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற அறிஞர்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.


سؤالات الحاكم للدارقطني – الفاروق (ص: 119)
265 – دَرَّاج، أبو السَّمْح، ضَعِيْفٌ، ألقيتُ عليه حَدِيْث شُعْبَة، عن عَمْرو بن يَحْيَى، قَالَ: الْحَدِيْث الْحَسَن هكذا يكون.


سؤالات البرقاني للدارقطني ت القشقري (ص29):
142- وسمعته يقول دراج أبو السمح هو ابن سمعان مصري متروك.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  •  தர்ராஜ் —> இப்னு ஹுஜைரா —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-9407 , முஸ்னத் அபீ யஃலா-6644 , இப்னு ஹிப்பான்-3112 ,

…ஹாகிம்-,


2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-11334.


3 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

 


…

அபூயஃலா இமாம்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் அபூமூஸா-அஹ்மத் பின் ஈஸா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் வஹ்ப்

عبد الله بن وهب بن مسلم

இறப்பு: ஹிஜ்ரி 197, எகிப்து

தரம்: மிகப் பலமானவர், மனனமிட்டவர், வணக்கசாலி


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் வஹ்ப் பின் முஸ்லிம்

தந்தை பெயர்: வஹ்ப் பின் முஸ்லிம்

வம்சம்: குரைஷீ, பனூ ஃபிஹ்ர் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூ முஹம்மத், அல்ஃபகீஹ்

ஊர் பெயர்: எகிப்து

பயணித்த ஊர்கள்: எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 125, எகிப்து

இறப்பு: ஹிஜ்ரி 197, எகிப்து

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் வஹ்ப் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 125 இல் எகிப்தில் பிறந்தார். அவர் மிகப் பலமானவர், மனனமிட்டவர் மற்றும் வணக்கசாலி ஆவார். அவர் ஒரு ஃகீஹ் (சட்ட வல்லுநர்) மற்றும் ஹதீஸ் அறிஞர் ஆவார்.

ஹிஜாஸ் மற்றும் எகிப்து மக்களின் ஹதீஸ்களை சேகரித்து, மனனமிட்டு, தொகுத்தவர் இவர். அவர் ஹிஜ்ரி 197 இல் எகிப்தில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அம்ர் பின் அல்ஹாரிஸ், ஹுமைத் பின் ஹானி அபூ, ஹுஸைன் பின் அப்துல்லாஹ் அல்முஆஃபிரீ, பக்ர் பின் மத்ர், ஹைவத் பின் ஷுரைஹ், ஸயீத் பின் அபூஅய்யூப், அல்லைஸ் பின் ஸஃத், அப்துல்லாஹ் பின் லஹீஆ, அய்யாத் பின் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் பின் ஷுரைஹ், மாலிக் இமாம், ஸுலைமான் பின் பிலால் அத்தய்மீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஹ்மத் பின் அப்துர்ரஹ்மான், அப்துல்லாஹ் பின் யூசுஃப் அத்துனைஸீ, அஹ்மத் பின் ஸாலிஹ் அல்மஸ்ரீ, யஹ்யா பின் யஹ்யா பின் புகைர், அலீ பின் அல்மதீனீ, ஸயீத் பின் அபூமர்யம், இப்ராஹீம் பின் அல்மன்திர், அஸ்பஃக் பின் அல்ஃபரஜ், அஹ்மத் பின் அம்ர் பின் அஸ்ஸர்ஹ், ஹர்மலா பின் யஹ்யா, குதைபா பின் ஸயீத், ஈஸா பின் ஹம்மாத்

வேறு பெயர்கள்: இப்னு வஹ்ப், பின் வஹ்ப்


ஆதாரம்: muslimscholars.info (20029) · Should verify

அம்ர் பின் ஹாரிஸ்

عمرو بن الحارث

இறப்பு: ஹிஜ்ரி 148 இல் எகிப்தில் மரணமடைந்தார்

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அம்ர் பின் ஹாரிஸ் பின் யஃகூப் பின் அப்துல்லாஹ்

தந்தை பெயர்: ஹாரிஸ் பின் யஃகூப்

வம்சம்: அன்ஸாரிகளின் மவ்லா, கைஸ் பின் ஸஃத் பின் உபாதாவின் மவ்லா

புனைப்பெயர்: அபூ உமைய்யா

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 91 அல்லது 92 இல் மதீனாவில் பிறந்தார்

இறப்பு: ஹிஜ்ரி 148 இல் எகிப்தில் மரணமடைந்தார்

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அம்ர் பின் ஹாரிஸ் பின் யஃகூப் பின் அப்துல்லாஹ் ரஹ் அவர்கள் அன்ஸாரிகளின் மவ்லா ஆவார். அபூ உமைய்யா என்பது இவர்களின் குன்யா ஆகும். இவர் மதீனாவில் பிறந்தார், பின்னர் எகிப்தில் வாழ்ந்தார்.

இவர் மிகப் பலமானவர், ஃபகீஹ், ஹாஃபிழ் ஆவார். ஹிஜ்ரி 148 இல் எகிப்தில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஹாரிஸ் பின் யஃகூப், ஸல்ம் அபூ அந்நத்ர், அஸ்ஸுஹ்ரீ, அப்து ரப்பா பின் ஸயீத் பின் கைஸ் பின் அம்ர், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான், ரபீஆ பின் அபூ அப்துர்ரஹ்மான், ஹிப்பான் பின் வாஸிஉ பின் ஹிப்பான், அப்துர்ரஹ்மான் பின் அல்காஸிம், அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத், முஹம்மத் பின் முஸ்லிம் பின் தத்ரஸ், ஸுலைம் பின் ஜுபைர்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸலாஹ் பின் கைஸான் அல்மதனீ, கதாதா, புகைர் பின் அப்துல்லாஹ் பின் அல்அஷ்ஜ், உஸாமா பின் ஸைத் அல்லைஸீ, மூஸா பின் அஃயன் அல்ஜஸ்ரீ, முஹம்மத் பின் ஷுஐப் பின் ஷாபூர், நாஃபிஉ பின் யஸீத் அல்குலாஈ, யஹ்யா பின் அய்யூப் பின் அபூஸரா அல்பாஜ்லீ, ரஷீதய்ன் பின் ஸஃத் அல்மஹ்ரீ அல்கைனீ, பக்ர் பின் மத்ர் பின் முஹம்மத், அப்துல்லாஹ் பின் வஹ்ப், மாலிக் இமாம்

வேறு பெயர்கள்: அம்ர், அம்ர் பின் ஹாரிஸ் அல்மிஸ்ரீ


ஆதாரம்: muslimscholars.info (20377) · Should verify

அபுஸ்ஸம்ஹ்-அப்துல்லாஹ் பின் ஸம்ஹ்-தர்ராஜ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துர்ரஹ்மான் பின் ஹுஜைரா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.