தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1107

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

வெள்ளிக்கிழமை தினத்தில் நபி (ஸல்) அவர்கள் தனது உரையை நீளமாக்காதவர்களாக இருந்தார்கள். சாதாரண வார்த்தைகளைக் (கொண்டதாகவே) அவர்களது உரை அமையப்பெற்றிருந்தது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

(அபூதாவூத்: 1107)

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، أَخْبَرَنِي شَيْبَانُ أَبُو مُعَاوِيَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ السُّوَائِيِّ، قَالَ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُطِيلُ الْمَوْعِظَةَ يَوْمَ الْجُمُعَةِ، إِنَّمَا هُنَّ كَلِمَاتٌ يَسِيرَاتٌ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1107.
Abu-Dawood-Shamila-1107.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-935.




  • இந்தச் செய்தியை ஸிமாக் பின் ஹர்ப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அபுல்அஹ்வஸ் போன்ற பலர் வேறு வார்த்தையில் அறிவித்துள்ளனர்.

(நூல்: முஸ்லிம்-1571)

  • ஸிமாக் பின் ஹர்ப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷைபான் கருத்தை அறிவித்துள்ளார் என்று தெரிகிறது. மேலும் ஷைபானுக்கு பல மாணவர்கள் இருந்தும் வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    மட்டும் இந்த செய்தியை அவரிடமிருந்து அறிவித்துள்ளார்.
  • இதன் அறிவிப்பாளர்தொடர் ஹஸன், ஃகரீப் என்றாலும் கருத்து சரியானது என்பதால் இது ஸஹீஹுன் லிஃகைரிஹீ ஆகும்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18560-ஸிமாக் பின் ஹர்ப் அவர்களைப் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், சிலர் இவர் இறுதிக் காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்றும், வயதானக் காலத்தில் ஹதீஸ் அறிவிக்கும் போது மற்றவர்கள் சொல்லிக் கொடுப்பதை, இடையில் கூறுவதை அப்படியே கூறுவார் என்றும், சிலர் இவர் இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகள் குளறுபடியானவை என்றும் கூறியுள்ளனர்.

1 . பலமானவர் என்று கூறியவர்கள்:

  • இவரைப் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களின் கருத்துப் பற்றி அவரின் மாணவர்கள் பலவாறு அறிவித்துள்ளனர்:

1 . ஸிமாக் பின் ஹர்ப் பலமானவர் என்று கூறியுள்ளார்.

2 . இவர் இப்ராஹீம் பின் முஹாஜிர் என்பவரை விட பரவாயில்லை.

3 . மற்றவர்கள் நபியின் சொல்லாக அறிவிக்காத சில செய்திகளை இவர் (இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக) நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.

4 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறினார். காரணம் இக்ரிமா கூறியதாக தஃப்ஸீர்-குர்ஆன் விளக்கவுரையை அறிவிப்பார். அதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா கேட்டாரா? என்று நான் கேட்டால் ஆம் என்று கூறியிருப்பார். (அதாவது தல்கீனை-சொல்லிக் கொடுப்பதை அப்படியே ஏற்பவராக இருந்தார்). எனவே தான் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் தஃப்ஸீர் செய்திகளை அறிவிக்கும்போது இக்ரிமா வரை மட்டுமே அறிவிப்பாளரைக் கூறுவார் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
கூறியுள்ளார்.

  • இப்னு அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    தனது தந்தை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்களிடம் இவரைப் பற்றி கேட்கும்போது இவர், ஸதூக்-நம்பகமானவர் என்றும், ஸிகத்-பலமானவர் என்றும் கூறினார். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் அவர்கள் இவரை அப்துல்மலிக் பின் உமைர் என்பவரை விட பரவாயில்லை என்று கூறியுள்ளாரே! என்று இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    கேட்கும்போது ஆம், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாமின் கருத்து சரியானதே என்று கூறினார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் கூஃபாவைச் சேர்ந்த மூத்த தாபிஈன்களில் ஒருவர். இவரின் செய்திகள் ஹஸன் தரத்தில் அமைந்தவை. இவர் ஸதூக்-நம்பகமானவர்; சுமாரானவர் என்று கூறியுள்ளார்.

2 . பலவீனமானவர் என்று கூறியவர்கள்:

1 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் குறை கூறினார் என்று அஃப்பான் கூறியதாக உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அறிவித்துள்ளார். (என்ன வார்த்தையில் குறை கூறினார் என்று தான் மனனமிடவில்லை என்பதை அஃப்பான் அவர்களே குறிப்பிட்டுள்ளார்).

2 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியதாக இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்களும், சில செய்திகளில் பலவீனமானவர் என்று கூறியதாக இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அவர்களும் கூறியுள்ளனர்.

3 . இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
இவரை பலவீனமானவர் என்று கூறியதாக ஸகரிய்யா பின் அதீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 211
கூறியுள்ளார்.

4 . இப்னு கிராஷ் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 283
அவர்கள் இவரின் செய்தியில் சிறிது பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார்.

(இந்த விமர்சனங்கள் இவரின் சில செய்திகள் விசயத்தில் தான் சரியானதாகும்)

3 . நினைவாற்றல் சரியில்லாதவர்; இறுதிக் காலத்தில் மூளைக் குழம்பியவர்; மற்றவர்கள் சொல்லிக் கொடுப்பதை அப்படியே கூறுபவர் என்ற விமர்சனம்:

1 . இவர் பலமானவர்; இவரின் நினைவாற்றல் கெட்டுவிட்டது என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இமாம் கூறியுள்ளார். இவரின் நினைவாற்றல் கெட்டுவிட்டது என்று கூறியதற்கு காரணம் இவர் இறுதிகாலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று கூறியவரின் கருத்தை ஏற்றதால் தான் இவ்வாறு தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
கூறியுள்ளார்.

அது என்னவெனில், ஜரீர் பின் அப்துல்ஹமீத் என்பவர் கூறுகிறார்:

நான், ஸிமாக் பின் ஹர்பிடம் சென்றபோது அவர் நின்றவராக சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். எனவே வயதான காரணத்தால் அவரின் அறிவு கெட்டுவிட்டது (மூளைக் குழம்பிவிட்டார்) என்று நான் அவரிடம் எதையும் கேட்காமல் திரும்பிச் சென்று விட்டேன்.

(நூல்: மீஸானுல் இஃதிதால்-2/233)

2 . மூளைக் குழம்பிவிட்டார் என்பதற்கு நின்றுக் கொண்டு சிறுநீர் கழித்ததை காரணமாக கூறியிருப்பது சரியானதல்ல என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

3 . ஹதீஸை அறிவிக்கும் போது மற்றவர்கள் (மாணவர்கள்) சொல்லிக் கொடுப்பதை அப்படியே கூறுபவர் என்ற விமர்சனம் அனைத்து செய்திகள் விசயத்திலும் அல்ல. இவர், இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகள் விசயத்தில் தான் ஆரம்பத்தில் அப்படி ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் இவர் சில செய்திகளை இக்ரிமா கூறியதாக மனனமிட்டுருப்பார்; சில செய்திகளை இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் மனனமிட்டிருப்பார். இதை அவர் அறிவிக்கும்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
ஆகியோரின் விமர்சனத்திலிருந்து நமக்கு தெரிகிறது என்று ஸாலிஹ் ரிஃபாயீ என்ற அறிஞர் கூறியுள்ளார்.

இவர் இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகளை இவரிடமிருந்து ஆரம்பத்தில் செவியேற்ற ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
போன்றோர் அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்று யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அவர்கள் கூறியுள்ளார்.

4 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், இவரின் செய்திகள் குளறுபடியானவை என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-791)

(இந்த விமர்சனத்தை ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களின் கூற்றிலிருந்தே அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் எடுத்துள்ளார் என்பதால் இது சில செய்திகள் விசயத்தில் தான் சரியானதாகும்)

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/279, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/541, தஹ்தீபுல் கமால்-12/115, அல்இக்மால்-6/109, தஹ்தீபுத் தஹ்தீப்-2/114, தக்ரீபுத் தஹ்தீப்-1/415, அல்கவாகிபுன் நய்யிராத்-1/237, அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-791)


ஸிமாக் அவர்கள், இக்ரிமா (ரஹ்) வழியாக அறிவிக்கும் செய்திகள் பற்றிய விளக்கம்:

1 . ஸிமாக் அவர்கள், இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தனித்து அறிவிக்கும் செய்திகள்.

இவைகள் பெரும்பாலும் முன்கராக இருக்கும். இவை பலவீனமானவை.

2 . ஸிமாகிடமிருந்து ஷுஅபா, ஸுஃப்யான் ஸவ்ரீ, அபுல்அஹ்வஸ் ஆகியோர் ஸிமாக் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகள்.

இதில் வரும் செய்திகளை ஆய்வு செய்யவேண்டும். ஆய்வில் சிலவை சரியாகவும் இருக்கலாம். சிலவை பலவீனமாகவும் இருக்கலாம்.

3 . ஸிமாக் அவர்கள், இக்ரிமாவிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாத நபித்தோழர்கள் கூறியதாக அறிவிக்கும் செய்திகள்.

இதில் வரும் செய்திகள் பெரும்பாலும் சரியானவை. இவைகளை தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்ற பலர் சரியானது என்று கூறியுள்ளனர்.

இந்தத் தகவலை அப்துல்அஸீஸ் தரீஃபீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: ஷரஹ் புலூஃகுல் மராம்-50)

ஸிமாக் அவர்கள் இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகள் குளறுபடியானவை என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் கூறியதற்கு காரணம் உள்ளது. இவரிடமிருந்து ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஆகியோர் சில செய்திகளை இக்ரிமாவுடன் நிறுத்தியுள்ளார்கள். அதாவது நபித்தோழரைக் குறிப்பிடாமல் முர்ஸலாக அறிவித்துள்ளார்கள். அபுல்அஹ்வஸ், இஸ்ராயீல் ஆகியோர் ஸிமாக் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்று அறிவித்துள்ளார்கள். எனவே சிலர் முர்ஸலாகவும் சிலர் முத்தஸிலாகவும் அறிவிப்பதால் தான் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலை இல்லாத செய்திகள் சரியானவையாகும்.

இந்த தகவலைப் போன்றே மற்றொரு தகவலை இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் கூறியுள்ளதை அவர் மகன் வழியாக கதீப் பஃக்தாதீ பதிவு செய்துள்ளார்.

تاريخ مدينة السلام للخطيب البغدادي (10/ 298)
أخبرنا حمزة بن محمد بن طاهر، قال: حَدثنا الوليد بن بكر، قال: حَدثنا عَليّ بن أَحمد بن زكريا الهاشمي، قال: حَدثنا أَبو مسلم صالح بن أَحمد بن عَبد الله العجلي، قال: حَدثني أبي قال: وسماك بن حرب بكري جائز الحديث إلا أنه كان في حديث عكرمة ربما وصل الشيء، عن ابن عباس وربما، قال: قال رسولُ الله صَلى الله عَليهِ وسلمَ وإنما كان عكرمة يحدث، عن ابن عباس، وَكان سفيان الثوري يضعفه بعض الضعف، وَكان جائز الحديث لم يترك حديثه أحد، وَكان عالما بالشعر وأيام الناس، وَكان فصيحا.

ஸிமாக் பின் ஹர்ப் சுமாரானவர். என்றாலும் இவர், இக்ரிமா அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அறிவித்த சில செய்திகளை இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். எனவே தான் சில செய்திகளில் இவரை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
பலவீனமானவர் என்று கூறியுள்ளார்…

(நூல்: தாரீகு மதீனதுஸ் ஸலாம்-10/298)


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1107 , அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1571 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.