நபி (ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒரு காரியம் கஷ்டத்தை ஏற்படுத்தினால் தொழுகையின் பக்கம் விரைவார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
(அபூதாவூத்: 1319)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الدُّؤَلِيِّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، ابْنِ أَخِي حُذَيْفَةَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْرٌ، صَلَّى»
AbuDawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1319.
AbuDawood-Shamila-1319.
AbuDawood-Alamiah-1124.
AbuDawood-JawamiulKalim-1125.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-40246-முஹம்மது பின் அப்துல்லாஹ் அத்துஅலீ என்பவரின் பெயர் பற்றி
1 . முஹம்மது பின் அப்துல்லாஹ் அத்துஅலீ, 2 . முஹம்மது பின் அபூகுதாமா, 3 . முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் அபூகுதாமா, 4 . முஹம்மது பின் உபைத் அபூகுதாமா என்று பல வார்த்தை அமைப்பில் வந்துள்ளது. அனைவரும் ஒருவரே.
- இவரை இப்னு ஹிப்பானும், இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் அவர்களும் மட்டுமே பலமானவரின் பட்டியலில் சேர்த்துள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை மக்பூல் என்ற தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/864)
- இந்த செய்தியை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் ஹஸன் தரம் எனக் கூறியுள்ளார்.
(நூல்: அல்ஃபத்ஹ்-3/204)
- இவரிடமிருந்து இக்ரிமா பின் அம்மார் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
இவர் அறியப்படாதவர் எனக் கூறியுள்ளார். (இப்னு ஹிப்பானும், இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாமும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பவர்கள் இவரை அறியப்படாதவர் என்றே முடிவு செய்கின்றனர்.)
மேற்கண்ட செய்தி மிஷ்காத் என்ற நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் பலவீனமானது என்று கூறினார்.
பின்பு அபூதாவூதிலும், ஜாமிஉஸ் ஸகீரில் இந்த செய்தியை குறிப்பிடும் போது ஹஸன் தரம் எனக் கூறியுள்ளார்.
நபிமார்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தொழுகைக்கு விரைவர்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது.
(பார்க்க: அஹ்மத்-18937).
அதனடிப்படையில் மேற்கண்ட செய்தியை ஹஸன் தரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
வேறு சிலர், இந்தச் செய்தியின் கருத்து சரியாக இருந்தாலும் இக்ரிமா பின் அம்மார் இதை குளறுபடியாக அறிவித்துள்ளார் என்று கூறி இதை பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: பள்லுர்ரஹீமுல் வதூத்-1319)
1 . இந்தக் கருத்தில் ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-23299 , அபூதாவூத்-1319 , …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-479 ,
சமீப விமர்சனங்கள்