தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-479

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் :

நாட்டம் நிறைவேற தொழும் தொழுகை.

“யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும்.

பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, “லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்அலுக மூஜிபாதி ரஹ்மதிக, வ அஸாயிம மஃபிரதிக. வல்கனீமத மின் குல்லி பிர்ரிவ், வஸ்ஸலாமத்த மின் குல்லி இஸ்ம். லா ததஃலீ தம்பன் இல்லா கஃபர்தஹு, வலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹ், வலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களைதஹா யா அர்ஹமர் ராஹிமீன்’ என்று கூறட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி)

(திர்மிதி: 479)

بَابُ مَا جَاءَ فِي صَلَاةِ الحَاجَةِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عِيسَى بْنِ يَزِيدَ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ، ح وحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَكْرٍ، عَنْ فَائِدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ كَانَتْ لَهُ إِلَى اللَّهِ حَاجَةٌ، أَوْ إِلَى أَحَدٍ مِنْ بَنِي آدَمَ فَلْيَتَوَضَّأْ وَلْيُحْسِنِ الْوُضُوءَ، ثُمَّ لِيُصَلِّ رَكْعَتَيْنِ، ثُمَّ لِيُثْنِ عَلَى اللَّهِ، وَلْيُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ لِيَقُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ الحَلِيمُ الكَرِيمُ، سُبْحَانَ اللَّهِ رَبِّ العَرْشِ العَظِيمِ، الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ، أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَالغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ، وَالسَّلَامَةَ مِنْ كُلِّ إِثْمٍ، لَا تَدَعْ لِي ذَنْبًا إِلَّا غَفَرْتَهُ، وَلَا هَمًّا إِلَّا فَرَّجْتَهُ، وَلَا حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلَّا قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَفِي إِسْنَادِهِ مَقَالٌ ، فَائِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ يُضَعَّفُ فِي الحَدِيثِ، وَفَائِدٌ هُوَ أَبُو الوَرْقَاءِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-441.
Tirmidhi-Shamila-479.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-441.




إسناد شديد الضعف فيه فايد بن عبد الرحمن المدني وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33284-ஃபாயித் பின் அப்துர்ரஹ்மான் அபுல்வர்கா பலவீனமானவர் என்று திர்மிதீ இமாம் அவர்களே இங்கு குறிப்பிட்டுள்ளார்கள்.
  • காரணம் இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ , போன்றோர் இவர் (பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால்) கைவிடப்பட்டவர் என்றும், ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் இவர் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) வழியாக பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/380)

وقال الحاكم : روى عن ابن أبي أوفى أحاديث موضوعة
تهذيب التهذيب: (3 / 380)

1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1384 , திர்மிதீ-479 , பஸ்ஸார்-3374 , ஹாகிம்-1199 ,

2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்தி:

பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-3398 .

  • மேற்கண்ட செய்தி பலவீனமானது என்பதால் ஸலாதுல் ஹாஜத்-ஹாஜத் நஃபில் என்ற பெயரில் தொழுகை இல்லை என்றாலும் தொழுகையைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும் என்பது குர்ஆனின் கட்டளையாகும்.

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும். திருக்குர்ஆன் 2:45

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! திருக்குர்ஆன் 2:153

நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தொழுவார்கள்.   பார்க்க : அபூதாவூத்-1319 .

  • மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஏதேனும் ஒரு நாட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காகத் தொழுவது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.