தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1319

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1319. நபி (ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒரு காரியம் கஷ்டத்தை ஏற்படுத்தினால் தொழுகையின் பக்கம் விரைவார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

ஹுதைஃபா (ரலி)

ஹுதைஃபா-அல்அப்ஸீ (ரலி) – Hudhayfah ibn al-Yaman

இறப்பு: ஹிஜ்ரி 36, மதாஇன்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஹுதைஃபா பின் ஹுஸைல் பின் ஜாபிர்

தந்தை பெயர்: அல்யமான் பின் ஜாபிர்

வம்சம்: அல்அப்ஸீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, கூஃபா, மதாஇன்

பிறப்பு: மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 36, மதாஇன்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

நபித்தோழர் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தவர். நபி (ஸல்) அவர்கள் இவரிடம் நயவஞ்சகர்களின் பெயர்களைத் தெரிவித்திருந்தார்கள். இதனால் இவர் "நபி (ஸல்) அவர்களின் ரகசியக் காப்பாளர்" என்று அழைக்கப்பட்டார்.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இவரை மதாஇன் நகரின் ஆளுநராக நியமித்தார்கள். இவர் உஹதுப் போரில் தனது தந்தையுடன் கலந்துகொண்டார். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு உலக முடிவு நாள் வரை நிகழவிருக்கும் அனைத்து ஃபித்னாக்களையும் பற்றி அறிவித்திருந்தார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஹிஜ்ரி 36 ஆம் ஆண்டு மதாஇன் நகரில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ வாயில் ஷகீக் பின் ஸலமா, ஸர் பின் ஹுபைஷ், ஸைத் பின் வஹ்ப், ரப்ஈ பின் கராஷ், ஸிலா பின் ஸுஃபர், அபூ இத்ரீஸ் ஆயிதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் அல்கவ்லானீ, அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா, ஹம்மாம் பின் அல்ஹாரிஸ், முஹம்மத் பின் ஸீரீன், அபூ உபைதா பின் ஹுதைஃபா பின் அல்யமான், உம்மு ஸலமா, ஸஃத் பின் ஹுதைஃபா பின் அல்யமான்

வேறு பெயர்கள்: ஹுதைஃபா பின் அல்யமான், அபூ அப்துல்லாஹ்


ஆதாரம்: muslimscholars.info (145) · Should verify


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الدُّؤَلِيِّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، ابْنِ أَخِي حُذَيْفَةَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْرٌ، صَلَّى»


AbuDawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1319.
AbuDawood-Shamila-1319.
AbuDawood-Alamiah-1124.
AbuDawood-JawamiulKalim-1125.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

…


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-40246-முஹம்மது பின் அப்துல்லாஹ்-துஅலீ என்பவரின் பெயர் பற்றி

1 . முஹம்மது பின் அப்துல்லாஹ் அத்துஅலீ, 2 . முஹம்மது பின் அபூகுதாமா, 3 . முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் அபூகுதாமா, 4 . முஹம்மது பின் உபைத் அபூகுதாமா என்று பல வார்த்தை அமைப்பில் வந்துள்ளது. அனைவரும் ஒருவரே.

  • இவரை இப்னு ஹிப்பானும், இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்களும் மட்டுமே பலமானவரின் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/864)

  • இந்த செய்தியை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் ஹஸன் தரம் எனக் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஃபத்ஹ்-3/204)

  • இவரிடமிருந்து இக்ரிமா பின் அம்மார் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    இவர் அறியப்படாதவர் எனக் கூறியுள்ளார்.
    (இப்னு ஹிப்பானும், இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாமும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பவர்கள் இவரை அறியப்படாதவர் என்றே முடிவு செய்கின்றனர்.)

மேற்கண்ட செய்தி மிஷ்காத் என்ற நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அதை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் பலவீனமானது என்று கூறினார்.

பின்பு அபூதாவூதிலும், ஜாமிஉஸ் ஸகீரில் இந்த செய்தியை குறிப்பிடும் போது ஹஸன் தரம் எனக் கூறியுள்ளார்.

நபிமார்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தொழுகைக்கு விரைவர்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது.

(பார்க்க: அஹ்மத்-18937).

அதனடிப்படையில் மேற்கண்ட செய்தியை ஹஸன் தரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வேறு சிலர், இந்தச் செய்தியின் கருத்து சரியாக இருந்தாலும் இக்ரிமா பின் அம்மார் இதை குளறுபடியாக அறிவித்துள்ளார் என்று கூறி இதை பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: பள்லுர்ரஹீமுல் வதூத்-1319)


1 . இந்தக் கருத்தில் ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-23299, அபூதாவூத்-1319, …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-479,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.