தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1332

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்தார்கள். அப்போது, மக்கள் குர்ஆனை சத்தமிட்டு ஓதுவதைச் செவியேற்றார்கள். எனவே, (தனது கூடாரத்தின்) திரையை விளக்கிவிட்டு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிந்துக் கொள்ளுங்கள்! உங்களில் ஒவ்வொருவரும் தன் இறைவனிடம் இரகசியமாக உரையாடுகிறார். எனவே உங்களில் சிலர், சிலருக்கு சிரமத்தை ஏற்படுத்தவேண்டாம். உங்களில் சிலர், சிலருக்கு இடையூறாக தொழுகையில் குர்ஆனை சத்தமிட்டு ஓத வேண்டாம்.

(அபூதாவூத்: 1332)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ:

اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، فَسَمِعَهُمْ يَجْهَرُونَ بِالْقِرَاءَةِ، فَكَشَفَ السِّتْرَ، وَقَالَ: «أَلَا إِنَّ كُلَّكُمْ مُنَاجٍ رَبَّهُ، فَلَا يُؤْذِيَنَّ بَعْضُكُمْ بَعْضًا، وَلَا يَرْفَعْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ فِي الْقِرَاءَةِ»، أَوْ قَالَ: «فِي الصَّلَاةِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1332.
Abu-Dawood-Alamiah-1135.
Abu-Dawood-JawamiulKalim-1136.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . ஹஸன் பின் அலீ

3 . அப்துர்ரஸ்ஸாக்

4 . மஃமர் பின் ராஷித்

5 . இஸ்மாயீல் பின் உமைய்யா

6 . அபூஸலமா

7 . அபூஸயீத் (ரலி)


 


1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> இஸ்மாயீல் பின் உமைய்யா —> அபூஸலமா —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-, அபூதாவூத்-1332, குப்ரா நஸாயீ-, இப்னு குஸைமா-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-, …


  • ரபாஹ் பின் ஸைத் —> மஃமர் —> இஸ்மாயீல் பின் உமைய்யா —> அபூஸலமா —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: தாரீகு பஃக்தாத்-4446,


2 . ஃபர்வா பின் அம்ர் அல்பயாளீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-213.


3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


4 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


5 . அபூஅம்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4620.



இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.