மக்கள் தொழுதுக் கொண்டிருக்கும் போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள் அதிகம் சத்தமிட்டு ஓதிக் கொண்டிருந்தார்கள். (தொழுகை முடிந்தபிறகு) நபி (ஸல்) அவர்கள், “தொழுது கொண்டிருப்பவர், தன் இறைவனிடம் உரையாடுகிறார். எனவே எதன் மூலம் அவனிடம் உரையாட வேண்டும் என்பது பற்றி அவர் சிந்திக்கட்டும்! உங்களில் சிலர், சிலருக்கு இடையூறாக சத்தமிட்டு குர்ஆனை ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஃபர்வா பின் அம்ர் அல்பயாளீ (ரலி)
(முஅத்தா மாலிக்: 213)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي حَازِمٍ التَّمَّارِ، عَنِ الْبَيَاضِيِّ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى النَّاسِ وَهُمْ يُصَلُّونَ. وَقَدْ عَلَتْ أَصْوَاتُهُمْ بِالْقِرَاءَةِ، فَقَالَ: «إِنَّ الْمُصَلِّيَ يُنَاجِي رَبَّهُ، فَلْيَنْظُرْ بِمَا يُنَاجِيهِ بِهِ، وَلَا يَجْهَرْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ بِالْقُرْآنِ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-213.
Muwatta-Malik-Alamiah-163.
Muwatta-Malik-JawamiulKalim-174.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . யஹ்யா பின் யஹ்யா அல்லைஸீ
2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம்
3 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்அன்ஸாரீ
4 . முஹம்மத் பின் இப்ராஹீம் அத்தைமீ
5 . தீனார்-அபூஹாஸிம் அத்தம்மார்
6 . ஃபர்வா பின் அம்ர் அல்பயாளீ (ரலி)
2 . இந்தக் கருத்தில் ஃபர்வா பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முஹம்மத் பின் இப்ராஹீம் —> அபூஹாஸிம் —> அல்பயாளீ (ரலி)
பார்க்க: மாலிக்-213, குப்ரா நஸாயீ-,
- முஹம்மத் பின் இப்ராஹீம் —> அதாஉ பின் யஸார் —> பயாளா கூட்டத்தைச் சேர்ந்த அன்ஸாரீ நபித்தோழர் (ரலி)
பார்க்க:
முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, குப்ரா நஸாயீ-,
அஹ்மத்-, குப்ரா நஸாயீ-, குப்ரா பைஹகீ-,
மேலும் பார்க்க: அபூதாவூத்-1332.
சமீப விமர்சனங்கள்