அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்கள் வீடுகளை அடக்கத் தலங்களாக ஆக்காதீர்கள். மேலும் எனது அடக்கத் தலத்தில் விழா எடுக்காதீர்கள். என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் கூறும் சலவாத்து நீங்கள் எங்கிருந்தாலும் என்னை வந்தடையும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(அபூதாவூத்: 2042)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَرَأْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ، أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا، وَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1746.
Abu-Dawood-Shamila-2042.
Abu-Dawood-Alamiah-1746.
Abu-Dawood-JawamiulKalim-1748.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26114-அப்துல்லாஹ் பின் நாஃபிஉ அவர்களைப்பற்றி, இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்றோர் இவர் நினைவாற்றலில் சிறிது குறையுள்ளவர் என்று கூறியுள்ளனர். என்றாலும் இவர் தன் நூலிலிருந்து அறிவித்தால் சரியானது என அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/443)
- தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இவரின் செய்திகளை மற்றவர்களின் செய்தியுடன் ஒப்பிட்டு பார்த்து ஏற்கவேண்டும் எனக் கூறியுள்ளார். (இவர் தனித்து அறிவித்தால் ஏற்றுக்கொள்ளக் கூடாது).
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/443)
- அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்றோர் இவர் தன் நூலிலிருந்து அறிவித்தால் சரியானது எனவும், மற்ற செய்திகளை ஆய்விற்கே பின்பே ஹஸன் தரத்தில் என்றோ அல்லது பலவீனமானது என்றோ கூறுகின்றனர்.
- இவர் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களின் அடிமையான நாபிஃஉ (ரஹ்) அவர்களின் மகன் அல்ல. அவர் பலவீனமானவர்.
இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-8804, அபூதாவூத்-2042, அல்முஃஜமுல் அவ்ஸத்-8030,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1430,
சமீப விமர்சனங்கள்