தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2933

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

செயலாளர்.

மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய தோளில் அடித்து, “மிக்தாமே! நீ தலைவராகவோ, பொருளாளராகவோ, செயலாளராகவோ இல்லாத நிலையில் மரணமடைந்தால் நீ (மறுமையில்) வெற்றிபெற்று விடுவாய்” என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 2933)

بَابٌ فِي الْعِرَافَةِ

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنْ أَبِي سَلَمَةَ سُلَيْمَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ يَحْيَى بْنِ جَابِرٍ، عَنْ صَالِحِ بْنِ يَحْيَى بْنِ الْمِقْدَامِ، عَنْ جَدِّهِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ عَلَى مَنْكِبِهِ، ثُمَّ قَالَ لَهُ: «أَفْلَحْتَ يَا قُدَيْمُ إِنْ مُتَّ وَلَمْ تَكُنْ أَمِيرًا، وَلَا كَاتِبًا وَلَا عَرِيفًا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2933.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2547.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19645-ஸாலிஹ் பின் யஹ்யா என்பவரைப்பற்றி இமாம் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவர் விசயத்தில் ஆட்சேபனை உள்ளது என்றும், இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 456
    வயது: 72
    அவர்கள் இவரும், இவரின் தந்தையும் அறியப்படாதவர்கள் என்று மூஸா பின் ஹாரூன் அவர்கள் கூறினார் என்றும், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் இவர் தவறிழைப்பவர் என்றும் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸிகாத்-6/459, அல்காஷிஃப்-3/17, தஹ்தீபுத் தஹ்தீப்-2/202, தக்ரீபுத் தஹ்தீப்-1/449)

2 . இந்தக் கருத்தில் மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸாலிஹ் பின் யஹ்யா —> மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-17205 , அபூதாவூத்-2933 , குப்ரா பைஹகீ-13047 ,

  • ஸாலிஹ் பின் யஹ்யா —> யஹ்யா பின் மிக்தாம் —> மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) 

பார்க்க: குப்ரா பைஹகீ-13048 ,

மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-4586 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.