தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3416

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) கூறினார்கள்:

திண்ணைத் தோழர்களுக்கு குர்ஆனையும் எழுத்தறிவையும் கற்றுக்கொடுத்தேன். அதனால் அவர்களுள் ஒருவர் எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். இது (பணம் சார்ந்த) பொருள் இல்லை. மேலும் நான் இதை அல்லாஹ்வின் பாதையில் எய்யப் பயன்படுத்துவேன்; (இருந்தாலும்) நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, (இதற்கான விளக்கத்தைக்) கேட்பேன் என்று நான் கூறிக்கொண்டேன்.

எனவே நான் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எழுத்துப் பயிற்சியையும் குர்ஆனையும் கற்றுக்கொடுத்தவர்களுள் ஒருவர், எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். இது (பணம் சார்ந்த) பொருள் இல்லை. நான் இதை அல்லாஹ்வின் பாதையில் எய்ய(ப் பயன்படுத்த)லாமா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “அதன் மூலம் (உமக்கு) நெருப்பு மாலை போடப்படுவது உமக்கு மகிழ்ச்சியளித்தால், அதை நீர் ஏற்றுக்கொள்” என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 3416)

أَبْوَابُ الْإِجَارَةِ

فِي كَسْبِ الْمُعَلِّمِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَحُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الرُّوَاسِيُّ، عَنْ مُغِيرَةَ بْنِ زِيَادٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنِ الْأَسْوَدِ بْنِ ثَعْلَبَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ:

عَلَّمْتُ نَاسًا مِنْ أَهْلِ الصُّفَّةِ الْكِتَابَ، وَالْقُرْآنَ فَأَهْدَى إِلَيَّ رَجُلٌ مِنْهُمْ قَوْسًا فَقُلْتُ: لَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، لَآتِيَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَأَسْأَلَنَّهُ فَأَتَيْتُهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلٌ أَهْدَى إِلَيَّ قَوْسًا مِمَّنْ كُنْتُ أُعَلِّمُهُ الْكِتَابَ وَالْقُرْآنَ، وَلَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ، قَالَ: «إِنْ كُنْتَ تُحِبُّ أَنْ تُطَوَّقَ طَوْقًا مِنْ نَارٍ فَاقْبَلْهَا»،


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3416.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் வரும் சில செய்திகளை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற சில அறிஞர்கள் சரியானது என்று கூறியிருந்தாலும் இதில் சில குறைகள் இருப்பதால் இவை பலவீனமானவை ஆகும்.

இதைப் பற்றிய விவரம்:

1 . உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்களில் பகிய்யது பின் வலீத், அபுல்முஃகீரா ஆகியோர் பிஷ்ர் பின் அப்துல்லாஹ் பின் யஸாரிடமிருந்து அறிவிக்கும் செய்தியை சிலர் சரியானது என்று கூறியுள்ளனர். பிஷ்ர் பின் அப்துல்லாஹ்வை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார். இவர் உமர் பின் அப்துல்அஸீஸ் அவர்களின் பாதுகாப்புதுறையில் இருந்தார் என்ற தகவல் மட்டுமே உள்ளது என்பதால் இவர் அறியப்பட்டவர்தான் என்றாலும் ஸதூக் என்ற தரத்தில் உள்ளவர் என்பதால் இவர் இடம்பெரும் செய்தி ஹஸன் தரத்தில் அமைந்ததாகும்.

இவர் இடம்பெறும் கருத்துக்கு மாற்றமான செய்தி மிகப்பலமானவர்கள் வழியாக வந்துள்ளது என்பதால் இவரின் செய்தியை ஆதாரமாக எடுக்கமுடியாது…

(பார்க்க: புகாரி-2310 , 5737 , … )

மேலும் இந்தச் செய்திபற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களும் விமர்சித்துள்ளார்…

(நூல்: இலலுல் ஹதீஸ்-1716)


2 . உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள் பலவீனமானவையாகும்.

3 . அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்தி பற்றி துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
அவர்கள் இது அடிப்படையில்லாத செய்தி என்று கூறியுள்ளார். இந்தச் செய்தி ஷாம்வாசிகள் வழியாக வந்துள்ளது. ஷாம்வாசிகளின் செய்திகளை துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
நன்கு அறிந்தவர் என்பதால் அவரின் கூற்றுக்கு மதிப்புள்ளது என்று ஹதீஸ்துறை ஆய்வாளர்களில் சிலர் கூறியுள்ளனர்.


1 . இந்தக் கருத்தில் உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உபாதா பின் நுஸய் —>  அஸ்வத் பின் ஸஃலபா —> உபாதா பின் ஸாமித் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, முன்தகப்-, இப்னு மாஜா-, அபூதாவூத்-3416 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,

  • பகிய்யது பின் வலீத், அபுல்முஃகீரா —> பிஷ்ர் பின் அப்துல்லாஹ் —> உபாதா பின் நுஸய் —>  ஜுனாதா பின் அபூஉமைய்யா —> உபாதா பின் ஸாமித் (ரலி)

பார்க்க: அஹ்மத்-22766 , அபூதாவூத்-3417 , ஹாகிம்-5527 , குப்ரா பைஹகீ-11683 ,


2 . உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2158 .

3 . அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-11685 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.