தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2158

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒருவருக்குக் குர்ஆனைக் கற்றுக்கொடுத்தேன். ஆகவே அவர் எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், “அதை நீர் எடுத்துக்கொண்டால் நரகத்திலிருந்து ஒரு வில்லை எடுத்துக்கொண்டுவிட்டீர்” என்று கூறினார்கள். ஆகவே நான் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

(இப்னுமாஜா: 2158)

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَعْدَانَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلْمٍ، عَنْ عَطِيَّةَ الْكَلَاعِيِّ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ:

عَلَّمْتُ رَجُلًا الْقُرْآنَ، فَأَهْدَى إِلَيَّ قَوْسًا، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنْ أَخَذْتَهَا أَخَذْتَ قَوْسًا مِنْ نَارٍ» ، فَرَدَدْتُهَا


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2158.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2149.




  • இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் இப்னுமாஜாவின் பெரும்பாலான பிரதிகளில், ஸஹ்ல் பின் அபூஸஹ்ல் —> யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    —> ஸவ்ர் பின் யஸீத் —> அப்துர்ரஹ்மான் பின் ஸல்ம் —> அதிய்யா —> உபை பின் கஅப் (ரலி)
    என்றே இடம்பெற்றுள்ளது.
  • மேற்கண்டவாறு சில பிரதிகளில் ஸவ்ர் பின் யஸீத், அப்துர்ரஹ்மான் பின் ஸல்ம் ஆகியோருக்கு இடையில் காலித் பின் மஃதான் என்பவர் கூறப்பட்டுள்ளார். மிஸ்ஸீ அவர்களின் துஹ்ஃபதுல் அஷ்ராஃப் என்ற நூலிலும் காலித் பின் மஃதான் கூறப்பட்டுள்ளார்.
  • ஆனால் மிஸ்ஸீ அவர்கள் தனது தஹ்தீபுல் கமாலில் இந்தச் செய்தியைக் குறிப்பிடும் போது காலித் பின் மஃதான் என்பவரைக் கூறவில்லை.
  • பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்களும் காலித் பின் மஃதான் என்பவரைக் கூறவில்லை.
  • இந்தச் செய்தியை பதிவு செய்த, மிஸ்ஸீ இமாம் அவர்களுக்கு முன்சென்ற, இப்னு அஸாகிர் அவர்களும் காலித் பின் மஃதான் என்பவரைக் கூறவில்லை. இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
    இறப்பு ஹிஜ்ரி 774
    வயது: 74
    அவர்களும் கூறவில்லை. இந்தச் செய்தியை பதிவு செய்த பலரும் காலித் பின் மஃதான் என்பவரைக் கூறவில்லை.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும், இப்னு மாஜாவின் கையெழுத்துப் பிரதியில் காலித் பின் மஃதான் என்பவரை கூறப்படவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அன்னுகதுள் ளிராஃப்-69, 1/36)

  • எனவே இவ்வளவு தகவல் இருந்தும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், தனது இர்வாவில் காலித் பின் மஃதானைக் குறிப்பிட்டுள்ளார். இது தவறு என்று தெரிகிறது.

(நூல்: இர்வாஉல் ஃகலீல்-1493)


இதன் அறிவிப்பாளர்தொடரில் 3 குறைகள் உள்ளன என்று ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் கூறியுள்ளனர்.

1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21785-அப்துர்ரஹ்மான் பின் ஸல்ம் என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார். இவர் அதிய்யா பின் கைஸ் என்பவரிடமிருந்து அறிவித்துள்ளார். இவரிடமிருந்து ஸவ்ர் பின் யஸீத் மட்டுமே அறிவித்துள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/512)

2 . அதிய்யா பின் கைஸ், உபை பின் கஅப் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகியோரிடம் செவியேற்கவில்லை என்பதால் இது முர்ஸல்-முன்கதிஃ என்று அலாயீ அவர்கள் கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவர் உபை (ரலி) போன்றோரிடமிருந்து அறிவிப்பது முர்ஸல்-முன்கதிஃ என்று கூறியுள்ளார்.

(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-704, 1/355, அல்காஷிஃப்-3824, 3/422)

என்றாலும் இந்தத் தகவலை அவ்வளவு உறுதியாகக் கூறமுடியாது. அதிய்யா பின் கைஸ் பிறந்த வருடம் பற்றி கருத்துவேறுபாடு இருப்பதால் இவர் உபை பின் கஅப் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகியோரிடம் கேட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

3 . இதன் அறிவிப்பாளர்தொடர் குளறுபடியானது என்று இமாம் மிஸ்ஸீ, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-17/148, அல்காஷிஃப்-3/256, தஹ்தீபுத் தஹ்தீப்-2/512)

இதற்கான காரணத்தை இவர்கள் குறிப்பிடவில்லை. என்றாலும் இதில் காலித் பின் மஃதான் கூறப்பட்டும், கூறப்படாமலும் வந்திருப்பதாலும், சிலவற்றில் அப்துர்ரஹ்மான் பின் ஸல்ம் என்றும், சிலவற்றில் அப்துர்ரஹ்மான் பின் அபூமுஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
என்று வந்திருப்பதாலும் இவ்வாறு கூறியுள்ளார்கள் எனத் தெரிகிறது.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


2 . இந்தக் கருத்தில் உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    —> ஸவ்ர் பின் யஸீத் —> அப்துர்ரஹ்மான் பின் ஸல்ம் —> அதிய்யா —> உபை பின் கஅப் (ரலி) 

பார்க்க: இப்னு மாஜா-2158 , குப்ரா பைஹகீ-11684 , அல்அஹாதீஸுல் முக்தாரா-1253 ,


  • அல்அஹாதீஸுல் முக்தாரா-1253.

الأحاديث المختارة = المستخرج من الأحاديث المختارة مما لم يخرجه البخاري ومسلم في صحيحيهما (4/ 22)

عَطِيَّةُ بْنُ قَيْسٍ الْكَلاعِيُّ عَنْ أُبَيِّ بْنِ كَعْب رَضِي الله عَنهُ إِسْنَاده ضَعِيف

1253 – أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ اللَّفْتُوَانِيُّ وَزَاهِرُ بْنُ أَحْمَدَ الثَّقَفِيُّ بِأَصْبَهَانَ أَنَّ الْحُسَيْنَ بْنَ عَبْدِ الْمَلِكِ أَخْبَرَهُمْ قِرَاءَةً عَلَيْهِ أَنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ الرَّازِيُّ أَنا جَعْفَرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنا مُحَمَّدُ بْنُ هَارُونَ نَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ نَا يَحْيَى بْنُ سَعِيدٍ نَا ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي مُسْلِمٍ عَنْ عَطِيَّةَ بْنُ قَيْسٍ الْكَلاعِيُّ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ أَنَّهُ عَلَّمَ رَجُلا الْقُرْآنَ فَأَهْدَى إِلَيْهِ قَوْسًا فَوَقَعَ فِي نَفْسِي شَيْئًا فَذَكَرْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ أَخَذْتَهَا فَخُذْهَا قَوْسًا مِنَ النَّارِ.

ذَكَرَ شَيْخُنَا أَبُو الْفَرَجِ بْنُ الْجَوْزِيِّ فِي كِتَابِ الضُّعَفَاءِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي مُسْلِمٍ عَنْ عَطِيَّةَ ضَعِيفٌ وَلَمْ يُنْسِبْ ذَلِكَ إِلَى أَحَدٍ

رَوَاهُ ابْنُ مَاجَهْ عَنْ سَهْلِ بْنِ أَبِي سَهْلٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ وَعِنْدَهُ (عَبْدُ الرَّحْمَن بن سلم) إِسْنَاده ضَعِيف


  • முஹம்மத் பின் ஜுஹாதா —> அபான் பின் அபூஅய்யாஷ் —> உபை பின் கஅப் (ரலி)

பார்க்க: அல்முன்தகப்-அப்து பின் ஹுமைத்-175.

المنتخب من مسند عبد بن حميد ت صبحي السامرائي (ص: 91)
175 – حَدَّثَنِي أَبُو الْوَلِيدِ، قَالَ: ثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، ثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، قَالَ: أَخْبَرَنِي رَجُلٌ يُقَالُ لَهُ أَبَانُ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنَّهُ عَلَّمَ رَجُلًا سُورَةً مِنَ الْقُرْآنِ، فَأَهْدَى إِلَيْهِ ثَوْبًا أَوْ قَالَ: خَمِيصَةً، قَالَ: فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَوْ أَنَّكَ أَخَذْتَهُ» أَوْ قَالَ: «إِنْ أَخَذْتَهُ» شَكَّ مُحَمَّدٌ أُلْبِسْتَ ثَوْبًا مِنَ النَّارِ

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபான் யாரெனக் கூறப்படவில்லை என்பதால் இவர் அறியப்படாதவர் ஆவார். இவர் ராவீ-36-அபான் பின் அபூஅய்யாஷ் என்றால் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களால் விடப்பட்டவர் ஆவார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-3416 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.