தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3730

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

பால் அருந்தும் போது கூறவேண்டியவை.

… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பால் கொண்டுவரப்பட்டது. அதை அவர்கள் அருந்திய பின் உங்களில் ஒருவர் உணவு சாப்பிட்டபின் அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீஹி, வ அத்இம்னா கைரம் மின்ஹு என்றும், பால் அருந்தியபின் அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீஹி, வ ஸித்னா மின்ஹு என்றும் கூறட்டும் என கூறினார்கள்…

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 3730)

بَابُ مَا يَقُولُ إِذَا شَرِبَ اللَّبَنَ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ، ح وحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ عُمَرَ بْنِ حَرْمَلَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

كُنْتُ فِي بَيْتِ مَيْمُونَةَ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ فَجَاءُوا بِضَبَّيْنِ مَشْوِيَّيْنِ عَلَى ثُمَامَتَيْنِ، فَتَبَزَّقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ خَالِدٌ: إِخَالُكَ تَقْذُرُهُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ «أَجَلْ» ثُمَّ أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَبَنٍ فَشَرِبَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ، وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ، وَإِذَا سُقِيَ لَبَنًا فَلْيَقُلْ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ، وَزِدْنَا مِنْهُ، فَإِنَّهُ لَيْسَ شَيْءٌ يُجْزِئُ مِنَ الطَّعَامِ وَالشَّرَابِ إِلَّا اللَّبَنُ

قَالَ أَبُو دَاوُدَ: «هَذَا لَفْظُ مُسَدَّدٍ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3730.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3244.




إسناد ضعيف فيه علي بن زيد القرشي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-29905-அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், ஆதாரம்கொள்ளத்தக்கவர் அல்ல என்றும் விமர்சித்துள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/162, தக்ரீபுத் தஹ்தீப்-4768)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • பால் குடித்த பின் கூறும் துஆ பற்றி வரும் அனைத்து செய்திகளும் பலவீனமாக உள்ளன…

இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அலீ பின் ஸைத் —> உமர் பின் ஹர்மலா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க : அஹ்மத்-1904 , 1978 , 2569 , அபூதாவூத்-3730 , திர்மிதீ-3455 , குப்ரா நஸாயீ-10045 , 10046 ,

  • ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க : இப்னு மாஜா-3322 , 3426 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-5458 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.