அத்தியாயம் : 2
தொழுகை
144. கடமையான தொழுகை பற்றிய பாடம்.
நஜ்த் நாட்டவர்களிடமிருந்து ஒருவர் பரட்டைத் தலையோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது குரலின் முணுமுணுப்பை செவியுற முடிந்தது. ஆனால் கிட்டவருகின்ற வரை புரியவில்லை. (அவர் அருகில் வந்து) இஸ்லாத்தைப் பற்றி கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பகலிலும் இரவிலும் ஐந்து நேர தொழுகைகள் என்று சொன்னார்கள்.
அடுத்து இவை அல்லாதவை என் மீது கடமையாகுமா? என்று கேட்டதும், நபி (ஸல்) அவர்கள் இல்லை, ஆனால் நீ மேல் மிச்சமாக தொழுதாலே தவிர! என்று விளக்கம் சொன்னார்கள். மேலும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமலான் மாத நோன்பைப் பற்றி கூறினார்கள். அதற்கு அவர், இது அல்லாதது என் மீது கடமையாகுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இல்லை. ஆனால் நீ விரும்பி அதிகமாக நோன்பு நோற்றாலே தவிர! என்று பதில் சொன்னார்கள்.
அடுத்து, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மத்தை கூறினார்கள். இது அல்லாதது என் மீது கடமையாகுமா? என்று அவர் கேட்டதும், இல்லை. ஆனால் நீ விரும்பி அதிகமாக வழங்கினாலே தவிர! என்று பதில் சொன்னார்கள்.
பிறகு, அம்மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக? இதை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே திரும்பிச் சென்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவர் சொன்னது உண்மையானால் இவர் வெற்றி பெற்று விட்டார் என்று சொன்னார்கள் என்று தஹ்ஹா பின் உபைத்துல்லாஹ் அவர்கள் அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 391)2 – كِتَاب الصَّلَاةِ
144- بَابُ فَرْضِ الصَّلَاةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُ
جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفْقَهُ مَا يَقُولُ: حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ». قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَّوَّعَ». قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِيَامَ شَهْرِ رَمَضَانَ». قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَّوَّعَ». قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّدَقَةَ. قَالَ: فَهَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَّوَّعَ». فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ»
AbuDawood-Tamil-391.
AbuDawood-Shamila-391.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்