தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4104

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை எனது தங்கை) அஸ்மா பின்த் அபூபக்ர் அவர்கள், மெல்லிய ஆடை அணிந்தவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவரை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கண்டித்து, “அஸ்மாவே! ஒரு பெண் பருமடைந்து விட்டால் இதையும், இதையும் தவிர வேறு எதையும் காட்டக்கூடாது என்று கூறி தனது முகத்தையும், இரு முன் கைகளையும் சுட்டிக்காட்டினார்கள்.

(அபூதாவூத்: 4104)

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ كَعْبٍ الْأَنْطَاكِيُّ، وَمُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَرَّانِيُّ، قَالَا: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ سَعِيدِ بْنِ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ خَالِدٍ، قَالَ: يَعْقُوبُ ابْنُ دُرَيْكٍ: عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا،

أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ، دَخَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهَا ثِيَابٌ رِقَاقٌ، فَأَعْرَضَ عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «يَا أَسْمَاءُ، إِنَّ الْمَرْأَةَ إِذَا بَلَغَتِ الْمَحِيضَ لَمْ تَصْلُحْ أَنْ يُرَى مِنْهَا إِلَّا هَذَا وَهَذَا» وَأَشَارَ إِلَى وَجْهِهِ وَكَفَّيْهِ

قَالَ أَبُو دَاوُدَ: «هَذَا مُرْسَلٌ، خَالِدُ بْنُ دُرَيْكٍ لَمْ يُدْرِكْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4104.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3582.




إسناد شديد الضعف لأن به موضع انقطاع بين خالد بن دريك الشامي وعائشة بنت أبي بكر الصديق ، وفيه سعيد بن بشير الأزدي وهو منكر الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17234-ஸயீத் பின் பஷீர் பற்றி ஷுஃபா, அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ, பஸ்ஸார் போன்றோர் நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும் இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அவர்கள் இவர் கதாதா வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்களும், இவர் கதாதா வழியாக மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளார். இவ்வாறே ஸாஜீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.
  • இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவர் நினைவாற்றலில் குறையுள்ளவர்; என்றாலும் அதை பொறுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இவ்வாறே இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்களும் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/8, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/412)

  • மேலும் இதில் வரும் ராவீ-14523-காலித் பின் துரைக் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்களே இங்கு குறிப்பிட்டுள்ளார்.
  • என்றாலும் பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    போன்றோர் இந்த செய்தியையும், நபித்தோழர்களின் சில கூற்றுக்களையும் வைத்து கருத்து சரியானது என்று கூறியுள்ளனர்.
  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியையும், பைஹகீ-13497 எண்ணில் வரும் செய்தியையும் இணைத்து ஹஸன் என்று கூறியுள்ளார்.

(நூல்: இர்வாஉல் கலீல்-1795)

மேலும் ஜாமிஉஸ் ஸகீர்-7847 எண்ணில் ஹஸன் என்றும், தர்கீபில் ஹஸன் லிகைரிஹீ என்றும், அபூதாவூதில் சரியானது என்றும் கூறியுள்ளார். மேலும் ஜில்பாபுல் மர்அதில் முஸ்லிமா என்ற நூலிலும் இதை சரியானது என்று கூறியுள்ளார்.

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4104 , குப்ரா பைஹகீ-3218 , 13496 , ஸுனன் ஸகீர்-பைஹகீ-2358 , ஷுஅபுல் ஈமான்-7409 , அல்ஆதாப் லில்பைஹகீ-589 ,

2 . அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-378 .


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.