தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-378

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) வழியாக உபைத் பின் ரிஃபாஆவின் அறிவிப்புகள்

அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவரின் தங்கை அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். மேலும் அவர் கைப்பகுதி அகலமான நீண்ட ஆடையை அணிந்திருந்தார். அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே சென்று விட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி), அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வெறுக்கும் ஒரு செயலை உன்னிடம் கண்டுள்ளார்கள். எனவே நீ சென்றுவிடு என்று அஸ்மாவிடம் கூறினார்கள். பின்பு அவர்கள் கதவை திறக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே வந்தார்கள். அவர்களிடம், ஆயிஷா (ரலி)  நீங்கள் ஏன் சென்றுவிட்டீர்கள் என்று கேட்க, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அஸ்மாவின் உடல் அமைப்பை நீ கவனிக்கவில்லையா?  ஒரு பெண் முகத்தையும், இரு முன்கை விரல்களையும் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக்கூடாது என்பதை செயலில் செய்து காட்டினார்கள்…

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 378)

عُبَيْدُ بْنُ رِفَاعَةَ الزُّرَقِيُّ، عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ

حَدَّثَنَا أَبُو الزِّنْباعِ رَوْحُ بْنُ الْفَرَجِ، ثنا عَمْرُو بْنُ خَالِدٍ الْحَرَّانِيُّ، ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّهُ سَمِعَ إِبْرَاهِيمَ بْنَ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ الْأَنْصَارِيُّ يُخْبِرُ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، أَنَّهَا قَالَتْ:

دَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا عَلَى عَائِشَةَ بِنْتِ أَبِي بَكْرٍ وَعِنْدَهَا أُخْتُهَا أَسْمَاءُ، وَعَلَيْهَا ثِيَابٌ سَابِغَةٌ وَاسِعَةُ الْأَكِمَّةِ، فَلَمَّا نَظَرَ إِلَيْهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فَخَرَجَ، فَقَالَتْ لَهَا عَائِشَةُ: تَنَحَّيْ فَقَدْ رَأَى مِنْكِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْرًا كَرِهَهُ، فَفَتَحَتْ فَدَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَتْهُ عَائِشَةُ لِمَ قَامَ؟ فَقَالَ: «أَوَ لَمْ تَرَيْ إِلَى هَيَّأَتِهَا، إِنْهُ لَيْسَ لِلْمَرْأَةِ الْمُسْلِمَةِ أَنْ يَبْدُو مِنْهَا إِلَّا هَكَذَا» وَأَخَذَ كُمَّيْهِ فَغَطَّى بِهِمَا ظُهُورَ كَفَّيْهِ حَتَّى لَمْ يَبْدُ مِنْ كَفَّيْهِ إِلَّا أَصَابِعُهُ، ثُمَّ نَصَبَ كَفَّيْهِ عَلَى صُدْغَيْهِ حَتَّى لَمْ يَبْدُ إِلَّا وَجْهُهُ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-378.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-19894.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32820-இயாள் பின் அப்துல்லாஹ் முஸ்லிமில் வரும் அறிவிப்பாளர் என்றாலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவரை பலவீனமானவர் என்றும், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் என்றும் கூறியுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/353, தக்ரீபுத் தஹ்தீப்-1/765)

  • மேலும் இதில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ பலவீனமானவர் என்ற விமர்சனம் இருந்தாலும் இவரிடமிருந்து முஹம்மது பின் ரும்ஹ் அறிவிப்பது இப்னு லஹீஆவின் நூலிலிருந்து என்பதால் இதை சிலர் விமர்சனமாக எடுப்பதில்லை.
  • இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் குறைந்த பலவீனம் என்றே கருதுவதால் இந்த செய்தியையும், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) வழியாக அபூதாவூத்-4104 ல் வரும் செய்தியையும் இணைத்து கருத்தை சரி காண்கிறார்.

2 . இந்தக் கருத்தில் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-378 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8394 , குப்ரா பைஹகீ-13497 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-4104 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.