அபூஹுரைரா (ரலி) அவர்களை ஒரு பெண் சந்தித்தாள். அவளிடமிருந்து நறுமணத்தின் வாசனையை அவர்கள் உணர்ந்தார்கள். மேலம் அவளது கீழாடையின் ஓரத்தில் (காற்றில் பறந்த) தூசியின் அடையாளமும் இருந்தது. அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அடக்கி ஆள்பவனான அல்லாஹ்வின் அடிமையே! நீ பள்ளிவாசலில் இருந்து வருகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “ஆம்” என்று பதிலளித்தாள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அந்தப் பள்ளிவாசலுக்காகத்தான் நீ நறுமணம் பூசிக் கொண்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “ஆம்” என்று பதிலளித்தாள்.
அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நான் என் நேசர் அபுல்காசிம் (முஹம்மத் ஸல்) அவர்கள், “எந்தப் பெண் இந்தப் பள்ளிவாசலுக்காக (வரும்போது) நறுமணம் பூசிக் கொள்கிறாளோ, அவள் திரும்பிச் சென்று (ஜனாபத் எனும்) பெருந்துடக்குக்காக குளிப்பது போன்று குளிக்கும் வரை அவளது தொழுகை அல்லாஹ்வால் ஏற்கப்படாது” என்றுக் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூருஹ்ம் என்பவரின் அடிமை-உபைத்
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
அல்இஃஸார் என்றால் புழுதி என்று பொருள்.
(அபூதாவூத்: 4174)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدٍ، مَوْلَى أَبِي رُهْمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
لَقِيَتْهُ امْرَأَةٌ وَجَدَ مِنْهَا رِيحَ الطِّيبِ يَنْفَحُ، وَلِذَيْلِهَا إِعْصَارٌ، فَقَالَ: يَا أَمَةَ الْجَبَّارِ، جِئْتِ مِنَ الْمَسْجِدِ؟ قَالَتْ: نَعَمْ، قَالَ: وَلَهُ تَطَيَّبْتِ؟ قَالَتْ: نَعَمْ، قَالَ: إِنِّي سَمِعْتُ حِبِّي أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُقْبَلُ صَلَاةٌ لِامْرَأَةٍ تَطَيَّبَتْ لِهَذَا الْمَسْجِدِ، حَتَّى تَرْجِعَ فَتَغْتَسِلَ غُسْلَهَا مِنَ الجَنَابَةِ»
قَالَ أَبُو دَاوُدَ: «الْإِعْصَارُ غُبَارٌ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4174.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸின் தரம் பற்றிய ஆய்வு முடிவு என்ன என்று சொல்ல முடியுமா?
வ அலைக்கும் ஸலாம். இதன் அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் உள்ளது. சில அறிஞர்கள் இதை ஹஸன் லிஃகைரிஹீ என்ற தரத்தில் தான் குறிப்பிட்டுள்ளனர்.
1 . பெண்கள் பள்ளிக்கு வரும்போது பொதுவாக வாசனை திரவியம் போடக்கூடாது என்ற செய்திகள்.
2 . இஷாத் தொழுகைக்கு வரும்போது போடக்கூடாது என்ற செய்திகள்.
3 . மேற்கண்ட கருத்தில் வரும் செய்திகள் குறித்து பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்கள், ஆய்வுகள் இருப்பதால் இன்ஷா அல்லஹ் பிறகு பதிவு செய்கிறோம்.
ஜஸாக்கல்லாஹ் ஹைரா