தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4914

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம், தனது (முஸ்லிமான) சகோதரனுடன் மூன்று நாட்களுக்குமேல் (நட்பை முறித்து) பேசாமலிருப்பது ஆகுமானதல்ல.

ஒருவர் மூன்று நாட்களுக்குமேல் பேசாமலிருந்து அந்நிலையில் அவர் இறந்துவிட்டால் அவர் நரகத்துக்குச் செல்வார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 4914)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ، فَمَنْ هَجَرَ فَوْقَ ثَلَاثٍ فَمَاتَ دَخَلَ النَّارَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4914.
Abu-Dawood-Alamiah-4268.
Abu-Dawood-JawamiulKalim-4270.




  • இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியை ஆரம்பத்தில் மன்ஸூர் பின் முஃதமிர் அவர்கள் நபியின் சொல்லாக சந்தேகமாக அறிவித்தாலும் பிறகு அவ்வாறு அறிவிக்கவில்லை; (நபித்தோழரின் சொல்லாக அறிவித்தார்) என்று ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

(பார்க்க: அஹ்மத்-9881)


மேலும் பார்க்க: முஸ்லிம்-5005 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.