தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5058

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, “அல்ஹம்து லில்லாஹில்லதீ கஃபானீ வ ஆவானீ, வ அத்அமனீ வ ஸகானீ, வல்லதீ மன்ன அலய்ய ஃப அஃப்ளல, வல்லதீ அஃதானீ ஃப அஜ்ஸல, அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால். அல்லாஹும்ம ரப்ப குல்லி ஷைஇவ், வ மலீகஹு வ இலாஹ குல்லி ஷைஇன். அஊது பிக மினன்னார்” என்று கூறுவார்கள்.

(பொருள்: எனக்குப் போதுமானவனாகவும், எனக்குப் புகலிடம் அளித்தவனுமான அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எனக்கு உணவளித்து, எனக்கு நீர் புகட்டியவனுக்கே புகழனைத்தும். என் மீது பேரருள் புரிந்து, சிறப்புகளை வழங்கியவனுக்கும், எனக்கு வழங்கியதை அதிகப்படுத்தியவனுக்கே புகழனைத்தும். எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அல்லாஹ்வே! எல்லாப் பொருட்களின் இறைவனே! அவற்றின் அதிபதியே! எல்லாப் பொருட்களின் வணக்கத்திற்குரியவனே! நரக நெருப்பை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

(அபூதாவூத்: 5058)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ حَدَّثَهُ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِذَا أَخَذَ مَضْجَعَهُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَآوَانِي، وَأَطْعَمَنِي وَسَقَانِي، وَالَّذِي مَنَّ عَلَيَّ فَأَفْضَلَ، وَالَّذِي أَعْطَانِي فَأَجْزَلَ، الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ اللَّهُمَّ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ وَإِلَهَ كُلِّ شَيْءٍ، أَعُوذُ بِكَ مِنَ النَّارِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4399.
Abu-Dawood-Shamila-5058.
Abu-Dawood-Alamiah-4399.
Abu-Dawood-JawamiulKalim-4401.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-5983, அபூதாவூத்-5058, குப்ரா நஸாயீ-7647, 10566, முஸ்னத் அபீ யஃலா-5758, இப்னு ஹிப்பான்-5538,


2 . புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4389.


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5258, புகாரி-7393,

1 comment on Abu-Dawood-5058

  1. இந்த செய்தியின் தமிழ்ஆக்கத்தையும் தரத்தையும் பதிவு செய்யவும்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.