தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5192

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஈராக்வாசிகளில் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து, “இப்னு அப்பாஸ் அவர்களே! அல்லாஹ் நமக்கு உத்தரவிட்ட ஒரு வசனத்தைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்த வசனத்தின்படி யாரும் செயல்படுவதில்லையே!. அந்த வசனம் (கீழ்க்கண்ட) இதுதான்” என்று கூறினர்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய மூன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 24:58)

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் விசயத்தில் பொறுமையுடையவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கிறான். மறைப்பதை அவன் விரும்புகிறான்.

அன்றைய காலத்தில் வீடுகளுக்குத் திரைகளோ, கூடாரங்களோ இருக்கவில்லை. ஆகவே, சில சமயம் ஒரு பணியாளரோ, ஒரு குழந்தையோ அல்லது ஒரு அநாதைப் பெண்ணோ ஒருவர் தமது மனைவியுடன் இருக்கும்போது உள்ளே வந்துவிடக்கூடும். எனவேதான், அல்லாஹ் அவர்களுக்கு இந்த மூன்று நேரங்களிலும் அனுமதி கோருமாறு கட்டளையிட்டான். அதன் பின்னர் அல்லாஹ் அவர்களுக்குத் திரைகளையும் நற்செல்வங்களையும் கொடுத்தான். அதன் பிறகு அந்த வசனத்தின்படி எவரும் செயல்படுவதை நான் காணவில்லை” என்று கூறினார்கள்.


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஹதீஸ் எண்-5191 இல் வரும் உபைதுல்லாஹ் (ரஹ்), அதாஃ (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகள் இந்த ஹதீஸை பலவீனமாக்குகிறது.

(அபூதாவூத்: 5192)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ،

أَنَّ نَفَرًا مِنْ أَهْلِ الْعِرَاقِ قَالُوا: يَا ابْنَ عَبَّاسٍ كَيْفَ تَرَى فِي هَذِهِ الْآيَةِ الَّتِي أُمِرْنَا فِيهَا بِمَا أُمِرْنَا، وَلَا يَعْمَلُ بِهَا أَحَدٌ؟ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ} [النور: 58] لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُمْ قَرَأَ الْقَعْنَبِيُّ إِلَى {عَلِيمٌ حَكِيمٌ} [النور: 59] قَالَ ابْنُ عَبَّاسٍ: «إِنَّ اللَّهَ حَلِيمٌ رَحِيمٌ بِالْمُؤْمِنِينَ يُحِبُّ السَّتْرَ، وَكَانَ النَّاسُ لَيْسَ لِبُيُوتِهِمْ سُتُورٌ وَلَا حِجَالٌ، فَرُبَّمَا دَخَلَ الْخَادِمُ أَوِ الْوَلَدُ أَوْ يَتِيمَةُ الرَّجُلِ وَالرَّجُلُ عَلَى أَهْلِهِ، فَأَمَرَهُمُ اللَّهُ بِالِاسْتِئْذَانِ فِي تِلْكَ الْعَوْرَاتِ، فَجَاءَهُمُ اللَّهُ بِالسُّتُورِ وَالْخَيْرِ، فَلَمْ أَرَ أَحَدًا يَعْمَلُ بِذَلِكَ بَعْدُ»

قَالَ أَبُو دَاوُدَ: «حَدِيثُ عُبَيْدِ اللَّهِ وَعَطَاءٍ يُفْسِدُ هَذَا الْحَدِيثَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4518.
Abu-Dawood-Shamila-5192.
Abu-Dawood-Alamiah-4518.
Abu-Dawood-JawamiulKalim-4520.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அப்துல்லாஹ் பின் மஸ்லமா

3 . அப்துல்அஸீஸ் பின் முஹம்மத்

4 . அம்ர் பின் மைஸரா-அம்ர் பின் அபூஅம்ர்

5 . இக்ரிமா-இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமை

6 . இப்னு அப்பாஸ் (ரலி)


இந்தச் செய்தியின் கருத்தை இதற்கு முன்னால் உள்ள செய்தி பலவீனமாக்குகிறது என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியின் கருத்து:

(அல்குர்ஆன்: 24:58) இல் வரும் வசனத்தின்படி மக்கள் செயல்படாததால் இந்த வசனம் மாற்றப்பட்டுவிட்டதோ? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அதனால் தான் இதைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் மேற்கண்டவாறு விளக்கம் கேட்கின்றனர். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் காரணத்தைக் கூறுகிறார்கள்.

இதற்கு முன்னுள்ள செய்தியை பார்த்தால், “(சிலரைத் தவிர) மக்களில் அதிகமானோர் இதன்படி செயல்படுவதில்லை. நான் தான் செயல்படுகிறேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

இதில் இடம்பெறும் ராவீ-23151-அப்துல்அஸீஸ் பின் முஹம்மத், ராவீ-32563-அம்ர் பின் அபூஅம்ர் ஆகியோரின் சில செய்திகளை புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். என்றாலும் இவர்களைப் பற்றி சிலர் விமர்சித்துள்ளனர்.

மேலும் இக்ரிமா அவர்கள் சில செய்திகளை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இதனடிப்படையில் இந்தச் செய்தி இதற்கு முன்னுள்ள செய்தியை விட தரம் குறைந்துவிடுகிறது.

என்றாலும் இந்த இரண்டு செய்திகளையும் இணைத்து, முதல் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆரம்பத்தில் கூறியது என்றும், பிறகு அவர்கள் சிந்தித்து இந்த செய்தியில் உள்ளதை கூறியிருக்கலாம் என்றும் சிலர் விளக்கம் கூறியுள்ளனர்.


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-5191,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.